தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனுன், பிரபல நடிகருமான ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 7வது போட்டியாளராக களம் இறங்கியுள்ளார். ‘ஜித்தன்,’ ‘மதுரை வீரன்,’ ‘புலி வருது,’ ‘நீ வேணும்டா செல்லம்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர்,

 

இதையும் படிங்க: செம்ம அழகு... மகன், மகளின் புகைப்படங்களை வெளியிட்ட சினேகா - பிரசன்னா...!

சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிப்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியை தேர்வு செய்துள்ளார். போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜித்தன் ரமேஷிடம் கமல் ஹாசன் உங்க அப்பா ஒரு பாஸ், நீங்க ஒரு பாஸ் இங்க ஏன் வந்தீங்க பாஸ் என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ஜித்தன் ரமேஷ், கொரோனா லாக்டவுனில் 6 மாதம் வீட்டிலேயே இருந்துட்டேன் சார்.விட்டால் டைவர்ஸ் வாங்கியிருப்பேன். அதுக்குள்ள பிக்பாஸில் இருந்து கால் வந்ததும் உடனே வர்றேன்னு ஒப்புக்கிட்டேன் என காமெடியாக பதிலளித்தார். 

 

இதையும் படிங்க: மறைந்த “வடிவேல் பாலாஜி” வீட்டிற்குள் நுழைந்த திருடன்... அவருடைய போட்டோவை பார்த்ததும் என்ன செய்தார் தெரியுமா?

அதற்கு கமல் ஹாசனோ இப்படி ஆரம்பிப்பிக்கும் போதே ஓபனாக பேசாதீங்க. மனசில் இருப்பதை அப்படியே வெளியில் சொல்கிறீர்கள். கொஞ்சம் அளந்து பேசுனீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் பார்த்துக்கோங்க என வாழ்த்துக்கூறினார். ஜித்தன் ரமேஷின் சகோதரர் ஜீவா ஆன்லைனில் தோன்றி அவருக்கு வாழ்த்து கூறி அனுப்பிவைத்தார்.