விஜய் டி.வி-யில் “அது இது எது”, “கலக்கப்போவது யாரு” என பல காமெடி நிகழ்ச்சிகளில் அச்சு அசலாக வடிவேலுவாக வலம் வந்த பாலாஜி, கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இளம் வயதில் அவரது திடீர் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக சினிமா துறை மற்றும் டிவி நட்சத்திரங்கள் பலரும் உருக்கமாக வடிவேல் பாலாஜிக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருந்தனர். நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று வடிவேல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

இதையும் படிங்க: செம்ம அழகு... மகன், மகளின் புகைப்படங்களை வெளியிட்ட சினேகா - பிரசன்னா...!

இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் டி.வி., ‘மிஸ் யூ வடிவேல் பாலாஜி’என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இன்று ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் வடிவேல் பாலாஜியின் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து விஜய் டி.வி. பிரபலங்கள் பேச உள்ளனர். இதற்கான புரோமோ வீடியோக்களை விஜய் டி.வி. ஒளிபரப்பாகி வருகிறது.

 

இதையும் படிங்க: ஜாக்கெட் போட மறந்துட்டீங்களா?... சேலையில் சாக்‌ஷி வெளியிட்ட போட்டோக்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

சற்று நேரத்திற்கு முன்பு விஜய் டி.வி. ஒளிபரப்பிய புரோமோ வீடியோவில் ஈரோடு மகேஷ் கூறிய தகவல் வடிவேல் பாலாஜி ரசிகர்களை கண் கலங்க வைத்துள்ளது. வேப்பம்பட்டு பகுதியில் வடிவேல் பாலாஜிக்கு வீடு உள்ளது. அங்கு திருவிழா நடந்த போது வடிவேல் பாலாஜி உள்ளிட்ட குடும்பத்தினர், வீட்டை பூட்டிவிட்டு திருவிழாவுக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். ஆனால் அங்கு வடிவேல் பாலாஜியின் போட்டோவை பார்த்த திருடன். அய்யய்யோ... இது வடிவேல் பாலாஜி வீடா?... தெரியாமல் உள்ளே நுழைந்துவிட்டேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, மன்னிப்புக்கேட்டுச் சென்றுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை ஈரோடு மகேஷ் நினைவுகூற பிரபலங்கள் பலரும் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ இது...