பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்ற சீசன்களை விடவும் இந்த சீசனில் முதல் நாளில் இருந்தே ஹவுஸ் மேட்ஸ் முட்டிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். எச்சில் தெறிக்கும் பிரச்சனையால் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சீறினார் அனிதா சம்பத். அதுகுறித்து நேற்றைய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் இரண்டாவது முறையாக செய்தி வாசிக்க தொடங்கும் போது, வணக்கம் சொல்லும்போது எச்சில் தெறிக்கும் அதனால் பக்கத்தில் நின்று பேசமாட்டேன் என்றார் அனிதா சம்பத், நீங்கள் நியூஸ் ரீடர்ஸைதான் சொன்னீர்கள் என்றும் நான் அப்படி சொல்லவே இல்லை என்று சுரேஷ் சக்கரவர்த்தியும் அடித்துக்கொள்ளாத குறையாக பேசிக் கொண்டனர். 

குறும்படம் போட்டுக் காட்டுங்கள் என அனிதா சொல்ல, குறும்படம் என்ன நெடும் படமே காட்டுகிறேன். நான் நியூஸ் ரீடர்களை பற்றி பொதுவாக பேசவில்லை. அதன் பின்னர் மக்களிடம் விளக்கம் கொடுத்த சுரேஷ் சக்கரவர்த்தி, “எனக்கு தெரிந்த நியூஸ் ரிடர் அம்மா, வணக்கம் சொன்னால் எச்சில் தெறிக்கும் அதை தான் நான் சொன்னேன்” என கூறினார். மேலும் “இனி உஷாராக இருக்க வேண்டும்” என்றும் சொன்னார். சிறிது நேரத்திற்கு பிறகு சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சென்ற அனிதா சம்பத், தானாகவே செக் ஹேண்ட் கொடுத்து சாமாதானம் ஆனார்.  பெரிய சண்டை போல் புரோமோவில் கட்டப்பட்ட விவகாரம் சப்பென முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். 

 

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் நயனையே அடித்து தூக்கிய வனிதா... பீட்டர் பாலுடன் கோவாவில் களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...!

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக மேலும் ஒரு புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா ஆகியோர் சமையல் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுரேஷ் சக்ரவத்தி, அனிதாவை பார்த்து பேசாதே என சொல்ல, அனிதாவே “அப்படியெல்லாம் சொன்னா பேசாமல் இருக்க முடியாது” என கோபமாக பதிலளிக்கிறார். இதனால் கடுப்பான சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதாவிடம், “Give respect, you are crossing your limit” என பேசுகிறார். அதற்கு அனிதாவோ சாரி சார் நான் ரேகா மேம்கிட்ட தான் பேசிட்டு இருந்தேன் என முகத்தை பார்க்காமல் பதிலளிக்கிறார். 

 

இதையும் படிங்க: மேலாடை இன்றி... தனி அறையில் ஆண் நண்பருடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்ட மீரா மிதுன்...!

“நல்ல மாட்டுக்கு ஒரு சூடும்மா... என்னை செருப்பால் அடிக்கிறவங்க கிட்ட என்னால பேச முடியாது” என சுரேஷ் சக்ரவர்த்தி சூடானார். இதை நக்கலடித்த பாலா, “நல்ல மாட்டுக்கு ஒரு சூடுன்னா... அப்போ எருமை மாட்டுக்கு என்ன சூடு” என காமெடியாக பேச... அனிதா சம்பத் சிரிக்க... மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி சூடேறி போகிறார்.... இந்த புரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...