“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார். யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. 

முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ஓவியா அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார். 

குறிப்பாக ஓவியா டாட்டூ தெரிய  வெளியிடும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாவது வழக்கம். ஏற்கனவே தனது வலது கை தோள் பகுதியில் டாட்டூ ஒன்றை குத்தியுள்ளார். அதை பல போட்டோ ஷூட்களில் ரசிகர்களின் கண்ணில் படும் படி காட்டியிருக்கிறார். இந்நிலையில் தன்னுடையை இடது காலில் பார்க்கவே செம்ம மெர்சலான டாட்டூ ஒன்றை குத்தியுள்ளார். 

 

இதையும் படிங்க: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகரின் மகனும் பங்கேற்கிறாரா?... கமலின் ஸ்பெஷல் பரிந்துரையாம்...!

சற்று வித்தியாசமாக ஒரு பாம்பு காலை சுற்றிக் கொண்டு இருப்பது போல டாட்டூவை தான் ஓவியா காலில் போட்டுக் கொண்டிருக்கிறார். அந்த பாம்பின் வாலை அதன் வாய் உள்ளே இருக்கிறது. “மை லிட்டில் மான்ஸ்டர்” என ஓவியா அது பற்றி குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். பார்க்க செம்ம பயங்கரமாக இருக்கும் அந்த வீடியோ சோசியல் மீடியோவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.