பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நாள் இன்று என கூறலாம். ஆம் இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதியை எட்டி உள்ளது. பலரும் பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். 

நேற்றைய தினம், இறுதி சுற்றில் நான்கு போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஜனனி வெளியேற்றப்பட்டதால் அது மூன்றாக குறைந்தது.  நடிகை விஜி, ஐஸ்வர்யா, மற்றும் ரித்விகா ஆகியோர் மீதம் இருந்தனர். 

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்ற ஆரவ், ரித்விகாவை வெளியே அழைத்து செல்வதுபோல் சைகை செய்து, வையல் கார்டு சுற்று மூலம் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்த விஜிஜை அழைத்து சென்றார்.

இதனால் ஐஸ்வர்யா மற்றும் ரித்விகா ஆகியோரில் ஒருவர் தான் பிக்பாஸ் வெற்றியாளர் என அனைவருக்குமே தெரிந்து விட்டது. ஆனால் ஆரம்பம் முதல் ஐஸ்வர்யாவை பிக்பாஸ் காப்பாற்றி வருவதால் ஐஸ்வர்யா கூட வெற்றியாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளராக அனைத்து ரசிகர்களும் யார் வர வேண்டும் என நினைத்தார்களோ அவர்கள் எண்ணம் போலவே, அதிகப்படியான வாக்குகளை பெற்ற நடிகை ரித்விகா தான் டைட்டில் வின்னர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதாக வேதனை பட்டு வந்த ரித்து முதல் முறையாக பெரிய வெற்றிக்கு தன் வசப்படுத்தியுள்ளார். இதனால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

புகைப்படம் இதோ