திரைத்துறையில் மிகப்பெரிய பெயரும், புகழும் கொண்ட விஜயகுமார் - மஞ்சுளா குடும்பத்தைச் சேர்ந்தவர் வனிதா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ-என்டரி கொடுத்தார். அதன் பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த வனிதா விஜயகுமார், தற்போது யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். 

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

கடந்த 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை வனிதா 3வது முறையாக கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரே பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து பிள்ளைகள் இருப்பது வெளியே வந்தது. இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியது. அந்த வரிசையில் சேர்ந்து கொண்ட சூர்யா தேவி என்ற பெண், தேவையில்லாமல் வனிதாவின் 3வது திருமணம் குறித்து யூ-டியூப்பில் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். 

 

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகாவிற்கு சவால் விட்ட சமந்தா... மாமனார் சொன்ன காரியத்தை எப்படி முடிச்சிருக்காங்க பாருங்க

வனிதா, பீட்டர் பால், வக்கீல் ஸ்ரீதர் என அனைவரை பற்றியும் மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். ஏற்கனவே தனது 3வது திருமணம் குறித்து அவதூறாக பேசுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வனிதா விஜயகுமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக சூர்யா தேவி மீது வனிதா விஜயகுமார் புகார் அளித்திருந்தார். 

 

இதையும் படிங்க: “ஐ அம் இன் லவ்”... 3வது முறையாக காதல் வயப்பட்ட அமலா பால்... வைரலாகும் போட்டோஸ்...!

இருப்பினும் சூர்யா தேவி அதுக்கு எல்லாம் அஞ்சுவதாக தெரியவில்லை, தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகிறார். இந்நிலையில் வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர், சூர்யா தேவி பேசிய தொலைபேசி ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சூர்யாதேவியிடம் ஒருவர் கஞ்சா கேட்க, அவர் தனது தம்பியிடம் இருப்பதாகவும், அவனிடம் பேசிவிட்டு கால் செய்கிறேன் எனவும் சொல்கிறார். இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, சென்னையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்கும் சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவருடைய வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.