“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார். யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. 

 

இதையும் படிங்க: நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது?... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி!

முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் தனது ரசிகர்களை ஏமாற்றாத ஓவியா அவ்வப்போது சோசியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவர்கள் கேட்கும் கேள்விக்கு எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் ஓபனாக பதிலளித்து வருகிறார். 

இதையும் படிங்க: “நான் ஏதாவது பண்ணிக்கிட்டால்”.... நெட்டிசன்களுக்கு வனிதா விடுத்த அதிரடி எச்சரிக்கை...!.

அப்படித்தான் சமீபத்தில் ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர்  தற்போது தான் சுய இன்பம் செய்து முடித்தேன் என்று கூற, “ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு பதிலாக, சுயஇன்பம் நல்லது! நான் சொல்வது சரியானதா? மேம்” என்று அதற்கு சற்றும் தாமதிக்காமல் உடனடியாக “உண்மை!” என பதிலளித்திருக்கிறார்.

இதையும் படிங்க:  “வனிதாவை பச்சை பச்சையாக கிழிக்க காரணம் இதுதான்”... போலீசை கண்டும் அஞ்சாத சூர்யா தேவியின் அடுத்த வீடியோ...!

மற்றொரு ரசிகர்.. 'உங்கள் வருங்கால கணவரைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருக்கிறதா? என்று கேட்டதற்கு “எனக்கு கணவர் தேவையில்லை” என்று பதிலளித்துள்ளார்.மேலும் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு "அரசியலில் நுழைவது குறித்து உங்களுக்கு ஏதேனும் யோசனை உள்ளதா? என்று கேட்க அது தேவைப்பட்டால்.. என்று சுருக்கமாக பதிலளித்துள்ளார் ஓவியா.