'பாரதி கண்ணம்மா 2' சீரியலில் ஹீரோ... ஹீரோயின் இவர்கள் தானா? வெளியான ப்ரோமோ கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியல் ஒருவழியாக இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், இரண்டாம் பாகத்திற்கும் அஸ்தீவாரம் போட்டுவிட்டது சீரியல் குழு. இது குறித்த புரோமோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை உச்சாகமடைய செய்துள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சீரியல் 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் அருண் பிரசாத் நடித்து வந்த நிலையில், முதலில் ஹீரோயினாக ரோஷ்ணி ஹரிப்ரியன் முதலில் நடித்த நிலையில், பின்னர் அவர் சில திரைப்பட வாய்ப்புகள் வந்ததால் வெளியேறினார். இவரை தொடர்ந்து கண்ணம்மா கதாபாத்திரத்தில், வினுஷா என்பவர் நடித்து வருகிறார்.
தாயை இழந்த கண்ணம்மாவை சித்தி கொடுமை செய்வதோடு, அவரை ஒரு முரடனுக்கு திருமணம் செய்து வைத்து, அவரை சாகடிக்க முடிவு செய்கிறார்கள். இது குறித்து ஹீரோவான டாக்டர் பாரதிக்கு தெரியவருகிறது. மேலும் விபத்து ஒன்றில், தனக்கு ஆண்மை இல்லை என்று நம்பிக்கொண்டிருப்பதாலும், காதலியை விபத்தில் இழந்த சோகத்தினாலும் திருமணமே வேண்டாம் என நினைக்கும் பாரதிக்கு, திடீர் என கண்ணம்மா மீது காதல் வருகிறது. ஆனால் அழகிய பெண்ணை தான் தன் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வர வேண்டும் என நினைக்கும் மாமியார் சௌந்தர்யாவுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும், அனைத்தையும் மீறி கண்ணம்மாவை கரம் பிடிக்கிறார் பாரதி.
பாரதிக்கு உண்மையில் எந்த பிரச்னையும் இல்லாததால் கண்ணம்மா கர்ப்பம் ஆகிறார். இது தான் பாரதிக்கு சந்தேகத்தை தூண்டுகிறது. குழந்தை பெற்று கொள்ளும் தகுதி தனக்கு இருக்கிறதா என பாரதி டெஸ்ட் செய்யும் ஒவ்வொரு முறையும் அதனை, பாரதியை அடைய வேண்டும் என நினைக்கும் வெண்பா மாற்றுகிறார். பாரதிக்காக கொலை செய்யவும் துணிகிறார். பாரதி மனதில் சந்தேகத்தை விதைத்து, ஒரேயடியாக கண்ணம்மாவிடம் இருந்து பிரிக்கும் வெண்பாவின் சூழ்ச்சி ஒரு கட்டத்தில் தெரிய வர கண்ணம்மா, பாரதி மற்றும் அவர்களுக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகள் எப்படி மீண்டும் ஒன்று சேர்கிறார்கள் என்பதை தான் கடந்த 5 வருடமாக ரப்பர் போன்று இழுத்து வந்தார் இயக்குனர்.
ஆனால் ஒருவழியாக கடந்த வாரம், பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வர உள்ளதை சீரியல் குழு உறுதி செய்த நிலையில், புதிய கதை கலத்துடன் 'பாரதி கண்ணம்மா 2' சீரியல் உருவாக உள்ளதாகவும் சில தகவல் வெளியானது. மேலும் இரண்டாம் பாகத்தில் சன் டிவி 'ரோஜா' சீரியலில் நடித்து வந்த சிபு சூரியன் ஹீரோவாக நடிப்பதாகவும், ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது புரோமோ வெளியிட்டு இந்த தகவலை சீரியல் குழு உறுதி செய்துள்ளது.
இரண்டாம் பாகத்தில் சிபு சூரியன் ஹீரோவாகவும், ஹீரோயினாக வினுஷாவே நடிக்கிறார். கடந்த முறை சிட்டியை மையமாக வைத்து கதை நகர்ந்த நிலையில்... இந்த முறை கிராமத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது புரோமோவை பார்த்தாலே தெரிகிறது. மேலும் முதல் பாகத்தில் இடம்பெற்ற சில நடிகர் - நடிகைகள் இரண்டாம் பாகத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாரதி கண்ணம்மா முதல் பாகத்தில் நடித்த வினுஷாவிற்கு தற்போது ஏராளமான ரசிகிர் உள்ள நிலையில், மீண்டும் இவர் பார்ட் 2 வில் நடிப்பதால் அவருடைய ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகிறார்கள்.
பிரபல நடிகையின் மகளை இரண்டாவது திருமணம் செய்த அதிதி ராய்யின் முன்னாள் கணவர்!வைரலாகும் போட்டோஸ்!
தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ..