சொந்த கிராமத்தில் பங்களா கட்டும் சீரியல் நடிகை நீலிமா! விறுவிறுப்பாக துவங்கிய பணிகள் அவரே வெளியிட்ட போட்டோஸ்!
சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பிரபலமாக இருக்கும் நடிகை நீலிமா இசை, தன்னுடைய சொந்த ஊரில் பூமி பூஜையோடு வீடு கட்டும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட, ரசிகர்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் கமலஹாசன் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, தேவர்மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நீலிமா இசை. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த, இவருக்கு சில சீரியல் வாய்ப்புகளும் கதவை தட்ட துவங்கியது.
சீரியலில் கவனம் செலுத்தி வந்தாலும், வெள்ளி திரையிலும் தொடர்ந்து குணசித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த வகையில், இவர் நடித்த மொழி, தம், நான் மகான் அல்ல, சந்தோஷ் சுப்பிரமணியம், போன்ற படங்கள் இவரை வெள்ளித்திரையிலும் பிரபலமாகியது.
தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், துவண்டு விடாத நீலிமா... சின்ன திரையில் ஹீரோயின் ஆகவும், வில்லி கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார்.
இவர் தன்னுடைய இளம் வயதிலேயே தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார். எனினும் தொடர்ந்து, கணவரின் ஒத்துழைப்பாலும், குடும்பத்தினரின் ஆதரவாளும், குழந்தை பெற்றுக் கொண்ட பிறகும் நடித்து வந்தார்.
இதை கவனித்தீர்களா? பக்கா ஸ்கெச் போட்டு... 'லியோ' படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்த லோகேஷ் கனகராஜ்!
நீலிமா இசைக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தை பிறந்தது. தற்போது குழந்தைக்காக நேர செலவிட்டு வரும் நீலிமா எந்த சீரியல்களிலும் நடிக்காத நிலையில், அவ்வப்போது... சமூக வலைதளத்தில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதே போல் குடும்பத்துடன் எங்கு சென்றாலும் அங்கு எடுக்கப்படும் குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது புதிய வீடு கட்டுவதற்கான பூமி பூஜை போடும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதாவது இவருடைய சொந்த கிராமமான திண்டுக்கல் மாவட்டம், ஒரத்தநாடு கிராமத்தில் பங்களா ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். இதற்கான பூமி பூஜை சில தினங்களுக்கு முன்னர், போடப்பட்ட நிலையில் இதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகையின் மகளை இரண்டாவது திருமணம் செய்த அதிதி ராய்யின் முன்னாள் கணவர்!வைரலாகும் போட்டோஸ்!
பொதுவாக சிட்டிகளில் வந்து செட்டிலான பின்னர், சாதாரண மனிதர்கள் கூட, கிராமத்து வாழ்க்கையை மறந்து விடும் நிலையில், தன்னுடைய சொந்த கிராமத்தில் வீடு கட்டி வாழ வேண்டும் என நினைக்கும் நீலிமா இசை மற்றும் அவருடைய கணவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.