பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், போட்டியாளர்களாக வாட்டர்மெலன் ஸ்டார், விஜே பார்வதி, கனி, சபரி என்று பிரபலங்கள் பங்கேற்று வரும் நிலையில் அடுத்த போட்டியாளர்கள் பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், போட்டியாளர்களாக வாட்டர்மெலன் ஸ்டார், விஜே பார்வதி, கனி, சபரி என்று பிரபலங்கள் பங்கேற்று வரும் நிலையில் அடுத்த போட்டியாளர்கள் பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் சீசன் 9 – 7ஆவது போட்டியாளர்:

விஜய் டிவி பிரபலமான சபரி பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9ஆவது சீசனில் 7ஆவது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் படிக்க வேண்டும் என்பதற்காக இவருடைய அக்கா வேலைக்கு சென்றதாக குறிப்பிட்டார். ஐடி வேலையை விட்டு விட்டு மீடியா வாழ்க்கைக்கு வந்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியலில் நாயகனாக நடித்து பேமஸ் ஆனார். அந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்த நிலையில், அவர் பிக் பாஸுக்குள் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்திருக்கிறார். வேலைக்காரன் சீரியலிலும் நடித்துள்ளார்.

காரக்கொழும்பு கனி முதல் புதுக்கோட்டை பையன் வரை – பிக் பாஸ் சீசன் 9 அடுத்த 3 போட்டியாளர்கள் பட்டியல்!

பிக் பாஸ் சீசன் 9 – 8ஆவது போட்டியாளர்:

இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை என்று சொல்லலாம். 80ஸ் கிட்ஸ்களுக்கு ரட்சகன், ஜோடி, ஸ்டார் போன்ற படங்களை கொடுத்தவர். சோனியா சோனியா என்று ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர். ஆம், நடிகர் நாகர்ஜூனாவின் ரட்சகன் படத்தை இயக்கியவர் தான் இயக்குர் பிரவீன் காந்தி. பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடித்த ஜோடி படத்தையும் இவர் இயக்கியுள்ளார். அதோடு அந்தப் படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். ஜோடி, ஸ்டார் போன்ற ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

Scroll to load tweet…

பிக் பாஸ் சீசன் 9 – 9ஆவது போட்டியாளர்:

கெமி, இவர் ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே-வாக பணியாற்றியவர். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு அசத்திய கெமி, ஆபிஸ் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். சமீபத்தில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த சிங்கிள் பசங்க ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். இவரும் பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

தொட்டது எல்லாம் பொன்னாகும் வீடு; பிக் பாஸ் தமிழ் சீசன் 9 லோகோ கொண்ட உடையில் விஜய் சேதுபதி!

பிக் பாஸ் சீசன் 9 – 10ஆவது போட்டியாளர்:

தளபதி விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்தில் மின்னொளி என்ற ரோலில் ஆதிரை சௌந்தரராஜன் நடித்துள்ளார். இது தவிர ஜீவா நடிப்பில் வந்த வரலாறு முக்கியம், தீர்க்கதரிஷி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன் மகாநதி சீரியலில் யமுனாவாக நடித்தார். தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 9 – 11ஆவது போட்டியாளர்:

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் 11ஆவது போட்டியாளராக டான்ஸரான ரம்யா ஜோ கலந்து கொண்டுள்ளார். மைசூரில் பிறந்து ரம்யா ஜோ தஞ்சாவூரில் வளர்ந்துள்ளார். தனது அக்காவின் துணையோடு வாழ்ந்து வந்த ரம்யா ஜோ ஒரு டான்ஸராக பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் டான்ஸ் குறித்து அளித்த பேட்டியின் காரணமாக பிரபலமான நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

Scroll to load tweet…