மலையாள திரையுலகில் பிசியான ஹீரோவாக வலம் வரும் பேசில் ஜோசப், தமிழில் ராவடி என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது.
Basil Joseph Next Tamil Movie : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கும் பதின்மூன்றாவது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. பேசில் ஜோசப் - எல்.கே.அக்ஷய் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு "ராவடி" என பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் வடிவேல் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் ரவிச்சந்தர் இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸை வெளியிட்டார்.
தமிழிலும் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படம், கோடை விடுமுறை வெளியீடாக திரையரங்குகளில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகும் இந்த ஃபன் என்டர்டெய்னர் படத்தின் இணை தயாரிப்பாளர் எல்.கே.விஷ்ணு. பேசில் ஜோசப், எல்.கே.அக்ஷய் குமார் ஆகியோருடன் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபிள் கே. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் பி.ஏ., ஷாரிக் ஹசன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
பேசில் ஜோசப் நடிக்கும் ராவடி
அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகப் பாராட்டைப் பெற்ற "சிறை" என்ற படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர் எல்.கே.அக்ஷய் குமார். சிறை படத்திற்கு பின்னர் அவர் நடிப்பில் உருவாகும் படம் இது என்பதால் ராவடி மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. அதுமட்டுமின்றி மலையாள நடிகர் பேசில் ஜோசப் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.
ராவடி திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார், இசை - ஜென் மார்ட்டின், படத்தொகுப்பு - பரத் விக்ரமன், கலை இயக்கம் - பி.எஸ்.ஹரிஹரன், உடைகள் - பிரியா. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



