SIRAI: யாரும் எதிர்பார்க்கல… ஆனா பாக்ஸ் ஆபிஸை குலுக்கிய ‘சிறை’! ஹீரோயிசம் இல்லாமலே ஹிட்!
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமார் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடித்த 'சிறை' திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. வெறும் ரூ. 6 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், ரூ. 31 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

பிரமாண்ட பட்ஜெட் படங்கள் மிஞ்சிய குட்டிப்படம்.!
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பெரிய ஹீரோக்கள், பிரமாண்ட பட்ஜெட் படங்கள்தான் பாக்ஸ் ஆபிஸில் கோலோச்சும் என்ற நம்பிக்கையை உடைத்த படம் என்றால் அது ‘சிறை’. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமார் இயக்கத்தில், விக்ரம் பிரபுவின் 25வது படமாக உருவான இந்த திரைப்படம், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மாபெரும் லாபத்தை ஈட்டியிருப்பது சினிமா வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விக்ரம் பிரபுவின் புதிய அவராதம்.!
‘கும்கி’ மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விக்ரம் பிரபு, அதன் பின்னர் சில ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தாலும், ‘டாணாக்காரன்’ மூலம் மீண்டும் தனது நடிப்பு திறனை நிரூபித்தார். அந்த வரிசையில் ‘சிறை’ அவரின் திரைப்பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இதில் சிறைக் கைதியின் காதல், மனித உரிமைகள், சமூக முன்னோக்குப் பார்வை போன்ற விஷயங்களை மையமாகக் கொண்டு, அழுத்தமான கதையுடன் படம் நகர்கிறது.
வசூல் சாதனை படைத்த சிறை.!
படத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார், அனிஷ்மா, அனந்தா, மூனார் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரின் இசை கதையின் உணர்ச்சிகளை மேலும் தீவிரமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. பெரிய விளம்பரங்களோ, மாஸ் ஓபனிங்கோ இல்லாமல் திரைக்கு வந்த ‘சிறை’, வாரம் வாரமாக தனது வசூலை உயர்த்திக்கொண்டே சென்றது தான் இதன் பெரிய பலம்.
சொன்னா நம்பமாட்டீங்க.!
ரூ. 6 கோடி மட்டுமே பட்ஜெட்டாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், தமிழில் மட்டுமே வெளியாகி தற்போது ரூ. 31.58 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இன்னும் வெளியாவாத நிலையிலேயே இப்படியான கலெக்ஷன் என்றால், தயாரிப்பாளருக்கு கிடைத்த லாபம் எத்தனை மடங்கு என்பதை சொல்லவே தேவையில்லை.
குறைந்த பட்ஜெட்டிலும் பெரிய வெற்றி சாத்தியம்
பெரிய ஹீரோயிசம், பஞ்ச் டயலாக் இல்லாமலேயே, கதை, நடிப்பு, உணர்ச்சி என்ற மூன்று ஆயுதங்களால் பாக்ஸ் ஆபிஸை வென்ற படம் ‘சிறை’. இது ரசிகர்களுக்கே மட்டுமல்லாமல், திரைப்படத் துறையினருக்கும் “குறைந்த பட்ஜெட்டிலும் பெரிய வெற்றி சாத்தியம்” என்பதை மீண்டும் நிரூபித்துள்ள ஒரு சைலண்ட் மாஸ் சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

