30 வருடமாக சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள போராடிய வி. சேகரின் உதவி இயக்குனரும், பாடலாசிரியருமான திருமாறன் அதிர்ச்சி மரணம். 

சினிமாவில் நுழையும் அனைவரும் முன்னணி இடத்திற்கு வரமுடியவில்லை என்றாலும், தங்களை நிலையான ஒரு இடத்தில் தக்கவைத்து கொள்ள நினைப்பது எதார்த்தமான ஒன்று தான். அப்படி 30 வருடமாக சினிமாவில் போராடிக் கொண்டிருந்தவர் திருமாறன். திறமை இருந்தும் வாய்ப்புக்காக ஏங்கி கொண்டிருந்த நேரத்தில், வாய்ப்பு வந்த பின் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1994ல் வி.சேகர் இயக்கிய “காலம் மாறிப்போச்சு” படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் திருமாறன். இதை தெடர்ந்து, 1998ம் ஆண்டு “கோல்மால்” படத்தின் மூலமாக பாடலாசிரியராக மாறினார் “வாடா வான்னா”, “ஹே பாப்பா, ஓ பாப்பா” என இரண்டு பாடல்களை இப்படத்திற்காக எழுதினார். இதை தொடர்ந்து பாடலாசிரியர் வாய்ப்பு கிடைக்காததால், தொடர்ந்து உதவி இயக்குநராக பணியாற்றினார். சில படைகளை இயக்க முயற்சி மேற்கொண்ட இவர் பல திரைக்கதை விவாதங்களில் கலந்து கொண்டும், திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.

லதா ரஜினிகாந்துடன்... கேக் வெட்டி 'லால் சலாம்' படத்தை கொண்டாடிய விஷ்ணு விஷால் - விக்ராந்த்! போட்டோஸ்!

மகளீர்க்காக படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றும் போது, அந்தோணிதாசனை முதல்முறையாக சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்திய பெருமை திருமாறனை தான் சேரும். தான் எழுதும் பாடலுக்கு தானே வித்தியாசமான மெட்டுக்களை போட்டு அதை பாடலாகவும் மற்றும் திறன் படைத்தவர். ஆனால் இவரின் பொறாத காலம்... திறமை இருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. வாழ்க்கையில் பல ரிஜெக்ஷனை சந்தித்த போதும்... விடாமுயற்சியோடு ஓடி கொண்டிருந்த திருமுருகன் ஒரு முறை பாடகராக இன்று வளர்ந்துள்ள அந்தோணி தாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

அவரை சந்தித்த போது மிக அழகான செறிவான கருத்துகள் கொண்ட பாடலை திருமாறன் பாட அந்த பாடல் அந்தோணிதாசனுக்குப் ரொம்பவே பிடித்துப்போக இந்தப்பாடலை நானே எங்களது இசை லேபல் “ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ்” மூலமாக வெளியிடுகிறேன் என்று திருமாறனிடம் கூறுகிறார். இதன் மூலம் 25 வருடங்கள் கழித்து மீண்டும் பாடலாசிரியராக வெளிச்சத்திற்கு வருகிறார், திருமாறன்.

காலர் வைத்த பேன்டில்... கருப்பு கலர் டைட் டீ ஷர்ட் அணிந்து வெக்கேஷனை என்ஜாய் பண்ணும் பிக்பாஸ் குயின் அர்ச்சனா!

அந்தோணிதாசன் இசையில், திருமாறன் எழுதிய “சுதந்திர தேசமே வந்தே மாதரம்” பாடலை, சின்னக்குயில் சித்ரா, சங்கர் மகாதேவன், ஜீவி பிரகாஷ்குமார், அந்தோணிதாசன், கேசவ் ராம், ரீத்தா அந்தோணிதாசன், ஹஷ்வந்த், மீனாட்சி இளையராஜா மற்றும் குட்டிப்பாப்பா ரௌடிபேபி வர்ஷினி ஆகியோர் பாடியுள்ளனர். விரைவில் ஒரு படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நேரத்தில், உடல் நிலை சரி இல்லாமல் திடீர் மரணம் அடைந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமாறனுக்கு மனைவியும் மகளும் உள்ளனர். திருமாறனின் இறுதிச் சடங்கு நிகழ்வு நாளை அம்பத்தூரில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.