நடிகர் ஆர்யா, கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னுடைய திருமணத்திற்கு 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்கிற நிகழ்ச்சியின் மூலம் பெண் தேடினார். இதில் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து மொத்தம் 10 ,000 பெண்கள் விண்ணப்பித்த நிலையில், இவர்களில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குள் பல்வேறு போட்டிகள் நடந்தன.

இறுதி போட்டிக்கு மூன்று பெண்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், கடைசியில், ஒருவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு பெண்களை ஏமாற்ற விருப்பம் இல்லை என கூறி, யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் வெளியேறினார்.

மேலும் செய்திகள் :  சித்தி 2 டி.ஆர்.பி-ல் பக்கா மாஸ் காட்டிய ராதிகா!

பின், ஆர்யாவுடன் 'கஜினிகாந்த்' படத்தில் ஹீரோயினாக நடித்த சாயீஷாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து தற்போது இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், 'டெடி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆர்யாவின் மனைவி சாயீஷா விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அவரிடம் தொகுப்பாளர்கள் உங்கள் கணவர் கலந்து கொண்டு விளையாடிய 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் அடுத்து எந்த நடிகர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் செய்திகள் :  தல பாணிக்கு மாறி சுட சுட பஜ்ஜி போட்ட சூரி! வைரலாகும் வீடியோ

இந்த கேள்வியை கேட்டதும், ரசிகர்களை பார்த்த சாயீஷா.... ரசிகர்கள் சிம்பு பெயரை கூறி கத்தினர். உடனே சாயிஷாவும் ரசிகர்களின் பதிலே தன்னுடைய பதில் என சிம்புவை கோர்த்துவிட்டுள்ளார். 

ஒருவேளை மீண்டும் இது போன்ற நிகழ்ச்சி நடத்தினால் அதில் சிம்பு கலந்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.