ஷூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த ஓய்வு நேரத்தில்... படக்குழுவினருக்கு சுட சுட பஜ்ஜி சுட்டு கொடுக்கும் வீடியோவை காமெடி நடிகர் சூரி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அது வைரலாக பரவி வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோக்கள் எந்த வேலை செய்தாலும் அது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்படும். அந்த வகையில்... தன்னுடைய ஒவ்வொரு ஷூட்டிங்கின் முடிந்ததும் படக்குழுவிற்கு, தன்னுடைய கைகளாலேயே பிரியாணி செய்து பரிமாறுவதற்கு வழக்கமாக வைத்துள்ளார் தல அஜித்.

மேலும் செய்திகள்: நகை திருட்டில் சிக்கிய 25 வயது இளம் நடிகை!

அவரை தொடர்ந்து, சமீப காலமாக பலர் இந்த வழக்கத்தை கையாண்டு வருகிறார்கள். குறிப்பாக சூர்யா, விஷால் போன்ற பிரபலங்கள் தனங்களுடைய ஷூட்டிங்கின் கடைசி நாளில்... படக்குழுவிற்கு விருந்து கொடுத்து, தங்க காசு கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால்... அஜித்தை தவிர படப்பிடிப்பில் ஓய்வு நேரங்களில் ஏதாவது செய்கிறார்களா என்றால் அது சந்தேகமே. இந்நிலையில் தற்போது நடிகர் சூரி சசிகுமாருடன் நடித்து வரும் ஒரு படத்தில் படப்பிடிப்பில்... படக்குழுவிற்காக தானே பஜ்ஜி செய்து கொடுத்து அசத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்: ஒல்லி பெல்லி இடுப்பில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் வளைத்து போட்ட இலியானா!

இதுகுறித்த வீடியோவையும் அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.