25 வயது நடிகை ஒருவர் நகை திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் திருடியதற்கான காரணம் குறித்தும் போலீசார் துருவி துருவி விசாரணை செய்து வருகிறார்கள்.

25 வயது நடிகை ஸ்நேஹலாத வசந்த் பாட்டீல், புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். பட வாய்ப்புகள் கிடைத்தால் துணை வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர், கோத்ரூட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து, ரூபாய் 50 ,000 மதிக்கத்தக்க நகைகளை திருடியதாக கூறி போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்: ஒல்லி பெல்லி இடுப்பால் ஓவர் டேக் செய்யும் இலியானா 

இந்த புகாரின் அடிப்படையில்...  புனே குற்றப்பிரிவின் துணை ஆணையர் பச்சன் சிங் தலைமையிலான போலீசார், நடிகை ஸ்நேஹலாத வீட்டை சோதனையிட்டனர். அவர் வீட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட நகைகள் கைப்பற்ற பட்டது. மேலும் ஸ்நேஹலதாவும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதை தொடர்ந்து, இவர் ஏன் நகைகளை திருடினார் என்றும், தொடர்ந்து இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்: 'எங்க வீட்டு மாப்பிளை' நிகழ்ச்சிக்கு முன்னணி நடிகரை கோத்துவிட்ட ஆர்யா மனைவி சாயீஷா!