பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 1991 ஆம் ஆண்டு, பிரபல நடிகை ராதிகாவை கதையின் நாயகியாக வைத்து துவங்கப்பட்ட சீரியல் 'சித்தி'. 2001 ஆம் ஆண்டு முடிவடைந்த இந்த சீரியல், முடிந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் குடும்ப தரசிகள் மத்தியில் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் ராதிகாவுக்கு மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது.

இந்நிலையில் கடந்த மாதம், சித்தி சீரியலில் இரண்டாம் பாகம் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. 

மேலும் செய்திகள்: தல பாணிக்கு மாறி சுட சுட பஜ்ஜி போட்ட சூரி! வைரலாகும் வீடியோ

இந்த சீரியல் துவங்கப்பட்டு ஒரு மாதம் மட்டுமே ஆகும் நிலையில், டி.ஆர்.பி-ல் நல்ல இடத்தை பிடித்து கெத்து காட்டியுள்ளது.

முதல் இடத்தில் நாயகி சீரியல் உள்ளது. இரண்டாவது இடத்தில் ரோஜா சீரியலும், மூன்றாவது இடத்தில் கண்மணி சீரியலும், நான்காவது இடத்தில் கல்யாண வீடு சீரியலும் உள்ளது. இதை தொடர்ந்து ஐந்தாவது இடத்தை சித்தி 2 பிடித்துள்ளது.

மேலும் செய்திகள்: கரீனாவை காப்பி அடித்த சமந்தா! கண்டு பிடித்து கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மிக குறுகிய நாட்களில் சித்தி 2  சீரியலுக்கு கிடைத்திருக்கு வரவேற்பு படக்குழுவை உட்சாக படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.