தமிழில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற '96 ' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில், நடிகை சமந்தா, திரிஷா வேடத்தில் நடித்திருந்தார். 

விஜய்சேதுபதி நடித்த வேடத்தில் தமிழில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்தில் அனன்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்த சர்வானத் நடித்திருத்துள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி வெளியான இந்த படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து, சமந்தா இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் வழக்கத்தை விட அதிக கவனம் செலுத்தினார்.

மேலும் செய்திகள் :  தல பாணிக்கு மாறி சுட சுட பஜ்ஜி போட்ட சூரி! வைரலாகும் வீடியோ

இந்நிலையில், புரொமோஷன் பணிகளில் இவர் ஜானு என பெயர் எழுதப்பட்ட சேலை ஒன்றை கட்டி வந்தார். அந்த புடவை தான் இப்போது நெட்டிசன்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. 

சமந்தா வித்தியாசமான முறையை கையோடு தன்னுடைய படத்தை புரோமோட் செய்து வருகிறார் என அவருடைய ரசிகர்கள் கூறி வந்த நிலையில், நெட்டிசன்கள் ஏற்கனக இந்த முறையை பாலிவுட் நடிகை கரீனா கபூர் கையாண்டு விட்டார்... அவரை தான் சமந்தா காப்பி அடித்துள்ளார் என கிண்டல் செய்து வருகிறார்கள். 

இவர்கள் இருவரும் ஒரே சேலை கட்டிய புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.