தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகளாக இருக்கும் ஆர்யா -  சயீஷா இருவரும், மார்ச் 10 ஆம் தேதி அன்று திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது ஹானிமூன் கொண்டாத்திற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.  ஹனி மூன் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சயிஷா முதல்முறையாக வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. கடந்த சில வருடங்களாக இவருடைய படங்கள் தொடர் தோல்வி அடைந்ததால், தற்போது நடிகர் சூர்யா நடித்துள்ள 'காப்பான்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

ஆர்யா சென்ற வருடம் 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது, கதாநாயகியாக நடித்த நடிகை சாயிஷாவுடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை ஆர்யாவின் நட்பு வட்டாரங்கள் உறுதி செய்த நிலையில், ஆர்யா தன்னுடைய காதல் பற்றி காதலர் தினத்தன்று ட்விட்டர்  மூலம் வெளிப்படுத்தினார்.

மேலும் மார்ச் 9 மற்றும் 10ம் தேதிகளில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியானது. அதன்படி ஹைதராபாத்தில் ஆர்யா- சயிஷாவின்  சங்கீத் நிகழ்ச்சி மார்ச் 9ஆம் தேதியும், திருமணம் மார்ச் 10ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து ஆர்யா - சயிஷா ஆகிய இருவரும் சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு  நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினர்.

தற்போது இருவரும் திருமணம் முடிந்து, ஹனிமூன் கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றுள்ளனர். இந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக  சாயிஷா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சிகரமான உடையில் இருக்கும் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இதற்கு ரசிகர்கள் பல வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.