நைட் ஒர்கவுட்டின் போது, நடிகர் அருண் விஜய் கீழே விழுந்து, சிறு காயங்களோடு தப்பிய வீடியோ ஒன்றை வெளியிட்டு, தன்னுடைய ரசிகர்கள் தயவு செய்து பயிற்சியாளர் இல்லாத நேரத்தில் இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

தல அஜித்துடன் நடிகர் அருண் விஜய் இணைந்து நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படம் அவருடைய வாழ்க்கையையே மாற்றியது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும், ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து, ஸ்கோர் செய்தார். 

அதன் பின்னர் ஹீரோவாக நடித்த படங்களில், சம்பளத்தை கூட குறைத்து கொண்டு, கதையில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து வெளியான ’குற்றம் 23’ திரைப்படம் இவருக்கு மிகப்பெறிய வெற்றி படமாக அமைந்தது.

மேலும் செய்திகள்: நிச்சயம் முடிந்து நின்ற போன திருமணம்...! தன்னுடைய காதல் பற்றி முதல் முறையாக மனம் திறந்த திரிஷா!
 

பின் அருண்விஜய் நடிப்பில் வெளியான, செக்க சிவந்த வானம்’ , 'தடம்', 'மாஃபியா' உள்ளிட்ட படங்கள் இவரை சூப்பர் ஹிட் ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களை பார்க்க வைத்தது. 

எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் அருண் விஜய், அவ்வப்போது... தான் ஜிம்மில் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்பவர். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு, தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார். 

மேலும் செய்திகள்: ரூ.30 கோடியில் உருவாகி வந்த சரவணா ஸ்டார் அண்ணாச்சியின் படம்..! இப்போது என்ன நிலையில் உள்ளது தெரியுமா?
 

இந்த வீடியோவில் அந்தரத்தில் தலைகீழாய் தொங்கியபடி நைட் ஒர்கவுட் செய்கிறார் அருண் விஜய். அப்போது எதிர்பாராத விதமாக கால் நழுவி கீழே விழுகிறார். இதில் சிறு காயங்களோடு தப்புகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது தயவுசெய்து பயிற்சியாளர் இல்லாத பட்சத்தில் இதுபோன்ற உடல் பயிற்சிகளை யாரும் செய்ய முற்பட வேண்டாம். கடந்த வாரம் நான் உடற்பயிற்சி செய்த போது கீழே விழுந்ததில் எனது இரண்டு முழங்கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. நல்ல வேலையாக தன்னுடைய தலையில் காயங்கள் இல்லாமல் தப்பினேன். என தன்னுடைய ரசிகர்களுக்கு சிறு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: அடங்காத மீரா மிதுன்...! பிளேசரை கழட்டி போட்டு முரட்டு ஆட்டம் போட்ட ஆண் நண்பர்..! ஹாட் வீடியோ
 

கண்ணிமைக்கும் நேரத்தில் அருண் விஜய் கீழே விழும் பகீர் வீடியோ இதோ...