பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே பிரச்சனைகளை தோள் மீது சுமந்து கொண்டு அலைந்தவர் மீரா மிதுன். தொடர் சர்ச்சைகள் இவரை சுற்றி வந்தாலும், சில ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சேரன் மீது இவர் கூறிய புகார் இவருக்கே பாதகமாக அமைந்தது. சேரனின் கண்ணீரை பார்த்த மக்கள், தயவு தாட்சனை பார்க்காமல், மீராவை எலிமினேட் செய்து வெளியில் அனுப்பினர்.

வெளியே வந்த மீரா தொடர்ந்து சில சர்ச்சைகளை கிளம்பினாலும் எதுவும் வேலைக்கு ஆகாததால், வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி உடையில், ரகரகமாக எடுக்கும் புகைப்படங்களையும், ஆண் நண்பர்களுடன் டான்ஸ் ஆடியபடி எடுக்கும் விதவிதமான வீடியோவையும் வெளியிட்டு வருகிறார். 

சமீபத்தில் கூட, யாரோ ஒருவர் மீரா மிதுனை மிகவும் மோசமாக மாஃபிங் செய்து போட்டோ வெளியிட, அதனை முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு டேக் செய்து, சமூக வலைத்தளத்தில் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவள் நானாகத்தான் இருப்பேன். இருப்பினும் அரசாங்கத்தின் சார்பில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை. 

மேலும் செய்திகள்: பொண்டாட்டி என்ன வேலைக்காரியா..? விடிவி கணேஷை வறுத்தெடுத்த சிம்பு..! ஃபேன்ஸ் செம்ம ஹாப்பி!
 

இதுபோன்ற கயவர்களால் பல பெண்கள் வாழ்க்கை பாழாகிறது. இப்படி பட்டவர்களுக்கு பெயிலில் வர முடியாத அளவிற்கு, தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். என்னை மன்னித்து விடுங்கள் பிரதமர். இங்கு போலீஸ் மற்றும் சட்டம் என இரண்டிற்குமே மதிப்பு இல்லை. ஆபாசமாக பெண்களை சித்தரிப்பவர்களை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என மன  குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் மீரா மிதுன்.

மீராமிதுன் குறித்த இந்த புகைப்படமும், மீராமிதுனின் புகாரும் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த கதறலை கேட்டு, மீரா மிதுனை திட்டியவர்கள் கூட, ஆறுதலாக சில வார்த்தைகள் கூறி இருந்தனர். 

மேலும் செய்திகள்: சோகம் நீங்குவதற்குள் வந்த பிறந்தநாள்..! கண்ணீரோடு ரோபோ ஷங்கர் மகள் போட்ட நெஞ்சை உருக வைக்கும் பதிவு!
 

இருப்பினும் தொடர்ந்து தன்னுடைய ஸ்டைலில் விதவிதமான புகைப்படங்களையும், ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட  பழைய வீடியோவையும்  வெளியிடுவதில் அம்மணிக்கு அம்புட்டு ஆர்வம். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வெளியிட்ட ஒரு வீடியோவை கவனித்தீர்கள் என்றால் அதில், மீரா மிதுனுடன் டான்ஸ் ஆடும் ஆண்  நண்பர் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போதே பிளேசரை கழட்டுகிறார். 

இதெல்லாம் கொஞ்சம் ஓவராவே இல்ல உங்களுக்கு...  என வழக்கம் போல் நெட்டிசன்கள் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்து வருகிறார்கள்.

அந்த வீடியோ இதோ...