தமிழ் சினிமாவில் கிட்ட தட்ட 20 ஆண்டுகளாக, ஹீரோயினாக மட்டுமே நடித்து வருபவர் நடிகை திரிஷா. கோலிவுட் திரையுலகில் உள்ள முன்னணி கதாநாயகர்களான, விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்த பெருமை இவருக்கு உண்டு.

30 வயதை தாண்டிய பிரபல நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள இவருக்கு, கடந்த 2015 ஆம் ஆண்டு, பிரபல தயாரிப்பாளரும் - தொழிலதிபருமான வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களுடைய பெற்றோரும் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினர்.

பல பிரபலங்கள் கலந்து கொள்ள, இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்தது. இதன் பின்னர் இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட, மனக்கசப்பு காரணமாக திருமணம் வேண்டாம் என முடிவு செய்து அதனை அதிகார பூர்வமாகவும் அறிவித்தனர்.

இதை தொடர்ந்து, நடிகை திரிஷா... காதல்... திருமணம்... என எதற்கும் இடம் கொடுக்காமல், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.  

சமீபத்தில் தனது ரசிகர்களின் சுவராஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்த திரிஷா முதல்முறையாக காதல் குறித்த தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

உங்களுடைய வாழ்க்கையில் காதலை கண்டு அறிந்துவிட்டீர்களா? என்ற ரசிகரின் கேள்விக்கு, நான் இன்னும் காதலை சந்திக்கவில்லை. காதல் என்பது பட்டாம் பூச்சி போன்ற உணர்வை கொடுப்பது. உண்மை காதல் இன்னும் நிறைய இடங்களில் இருக்கிறது என்றும் காதல் இல்லாமல் வாழவே முடியாது என்றும் அவர்  உணர்ச்சிபூர்வமாக பதிலளித்துள்ளார். முதல்முறையாக காதல் குறித்து மனம் திறந்து திரிஷா கூறிய இந்த பதில் திரிஷா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.