தஸ்லிமா நஸ்ரின் இந்த பதிவை பார்த்த கதிஜா தனது இன்ஸ்டாகிராமில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா எங்கு சென்றாலும் புர்கா அணிந்து கொண்டு செல்கிறார். உலக புகழ் பெற்ற இசையமைப்பாளரின் மகள் வெளியில் செல்லும் போது புர்கா அணிந்து கொண்டு செல்வது அடக்குமுறை என்று ஏ.ஆர்.ரகுமான் மீது விமர்சனங்கள் எழுந்தன. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கூட கதிஜா புர்காவுடன் தான் மேடையேறினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க:  "எனக்கும், விஜய்க்கும் சமரசம் பேசியதே தனுஷ் தான்"... விவாகரத்து குறித்து மனம் திறந்த அமலா பால்!

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தனது டுவிட்டரில் ஏ.ஆர்.ரகுமான் மகள் குறித்து தேவையில்லாமல் கருத்து பதிவிட்டு, புது சர்ச்சையை உருவாக்கியுள்ளார். அதில் ''ஏ.ஆர்.ரகுமானின் இசையை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அவரது மகளை பார்க்கும் போது தான் எனக்கு மூச்சு முட்டுகிறது. இதனால் நன்றாக படித்த பெண்கள் கூட எளிதில் மூளைச்சலவை செய்யப்படுவதை காண முடிகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படிங்க: தர்ஷனை கதறவிட்டு... காதலர் தினத்தில் துள்ளாட்டம் போட்ட சனம் ஷெட்டி... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

தஸ்லிமா நஸ்ரின் இந்த பதிவை பார்த்த கதிஜா தனது இன்ஸ்டாகிராமில் வெளுத்து வாங்கியுள்ளார். "இந்த பிரச்சனை முடிந்து ஒராண்டு தான் ஆகிறது. நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் கவலைப்படுவது பெண்கள் அணிய விரும்பும் உடையை பற்றி தான். ஒவ்வொருமுறை இதைப் பற்றி பேச்சு வரும் போதும், நிறைய விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். நான் எடுத்த முடிவை நினைத்து வருத்தப்படமாட்டேன். நான் செய்வதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

View post on Instagram

மேலும் "அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என் உடையை பார்த்தால் உங்களுக்கு மூச்சு முட்டுகிறது என்றால் சாரி, நல்ல காற்றை சுவாசித்துக்கொள்ளுங்கள். ஆனால் எனக்கு மூச்சுமுட்டவில்லை. மாறாக எனக்கு பெருமையாக இருக்கிறது" என்று நெத்தியடி பதிலளித்துள்ளார்.