'காலா' படத்தில் பார்க்க அசபுள்ள அசின் மாதிரியே தெரிந்த நடிகை தான் 'அஞ்சலி பாட்டீல்' நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பில் படு சுட்டியாம். இதனால் கஷ்டமான சூழலிலும் இவரை மெடிக்கல் படிக்க வைக்க ஆசைப்பட்டார்களாம் பெற்றோர். ஆனால் இவருக்கு ஃபிலிம் மேக்கிங் மேல் இருந்த ஆர்வத்தினால் திரையுலகின் பக்கம் வந்துவிட்டாராம்.

நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா டைரக்ஷன் படித்து முடித்து விட்டு, முதலில் அறிமுகமானது பாலிவுட் திரையுலகில் தான். பிலிம் மேக்கிங் கற்பதற்காக தான் தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய இவர் 'காலா' படத்தில் நடித்து நல்ல அனுபவம் என்றும், ரஜினி சாருடன் நடிச்சது மறக்க முடியாத மொமென்ட் என மெய் சிர்லிக்கிறார். மேலும் வாழ்க்கையை அதன் போக்கில் விடுங்க... அது தரும் தருணங்கலை நேரில் சந்திக்குபோது நிச்சயம் சந்தோஷப்படுவோம் என்று ரஜினி சார் சொன்னதை தற்போதும் மனதில் வச்சிருக்கேன் என கூறியுள்ளார் அஞ்சலி.