வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித் தெரு. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் சிந்து. தொடர்ந்து சினிமா, டிவியில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது கொரோனா காலத்தில் கூட சக கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்களை வழங்கி வந்தார். தீவிர சேவையில் ஈடுபட்ட இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக கிட்டதட்ட 7 மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு, தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். 

 

தற்போது நல்ல படியாக வீடு திரும்பியுள்ள சிந்து, மேற்கொண்டு கீமோதெரபி போன்ற சிகிச்சைக்களுக்கு தனக்கு பண உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதில், சிந்துவுக்கு மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்துவிட்டதாகவும், இருப்பினும் கீமோ உள்ளிட்ட சிகிச்சைக்கு பணம் இல்லாததால் திரையுலகினர், ரசிகர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்யும் படியும் கோரிக்கை வைத்துள்ளார். 

அந்த வீடியோவில் பேசியுள்ள சிந்து, நான் நல்லா இருந்த காலத்தில் பலருக்கு உதவி புரிந்துள்ளேன். ஆனால் நான் கேன்சரில் படுத்ததும் யாருக்கும் எனக்கு உதவ முன்வரவில்லை. இப்ப பணம் மற்றும் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். சக நடிகைக்காக உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். தனது அறுவை சிகிச்சைக்கு நடிகர்கள் சாய் தீனா, கார்த்தி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷன், நடிகை சோனியா போஸ் வெங்கட் உள்ளிட்டோர் உதவி புரிந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

 

இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது நடிகை... இனி முல்லை - கதிர் ஜோடிக்கு சிக்கல் தான்...!

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள அங்காடித் தெரு சிந்து, அஜித்திடம் பலமுறை உதவி கேட்டும், அவர் எந்த உதவியும் செய்யவில்லை என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சினிமாவை தாண்டி நடிகர் அஜித் ஜென்டில் மேன் என்று பெயரெடுத்தவர். அதேபோல நடிகர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார் என்று பல பிரபலங்கள் கூறி தான் இதுவரை நாம் கேட்டுள்ளோம். இந்நிலையில் சிந்து கூறிய இந்த குற்றச்சாட்டு அஜித் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

 

இதையும் படிங்க: அஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது?... டாப் ஆங்கிளில் வெளியிட்ட கிளாமர் செல்ஃபி...!

அந்த பேட்டியில், அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா சாரை 10 முறை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். ஆனால் அவர் அஜித்தை தொடர்பு கொள்ள முடியலன்னு சொல்லிட்டார். வெளியில் தான் அஜித்தை பற்றி ஆஹா... ஓஹோன்னு பேசுறாங்க. ஆனால் அவர் உதவி செஞ்சார்ன்னு சொல்லுறது எல்லாம் பொய். உதவி செய்யாமலே ஏன் இப்படி பொய் சொல்லுறீங்க என கோவத்துடன் கூறியுள்ளார்.