Valimai: வலிமை படத்தில் அஜித்திற்கு அருள் வாக்கு தந்த அம்மன் தாயீ....வைரல் புகைப்படம்..!
Valimai: வலிமை படத்தில் அஜித்துக்கு சகோதரியாக நடித்திருக்கும்,நடிகையின் புகைப்படம் பலரையும் ஆச்சரித்ததில் ஆழ்த்தியுள்ளது.
வலிமை படத்தில் அஜித்துக்கு சகோதரியாக நடித்திருக்கும்,நடிகையின் புகைப்படம் பலரையும் ஆச்சரித்ததில் ஆழ்த்தியுள்ளது. வலிமை படம் உலகம் முழுவதும் மாபெரும் வசூலை செய்து வருகிறது. குடும்ப ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் வலிமை பெற்றுள்ளது.
வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் வலிமை படம் கடந்த 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா கும்மகொண்டா குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகி உள்ள படம் வலிமை என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. வலிமை, வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை, படம் ரூ. 200 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், உலக பிரபலங்கள் பலரும் அஜித் மற்றும் வலிமை பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து
AK 61 படம்:
வலிமை வெற்றியை தொடர்ந்து, அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் இந்த கூட்டணி AK 61 படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்தின் ப்ரீ போட்டோஷூட் புகைப்படம் ஒன்று தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
அஜித்தின் சகோதரி சின்னவயது கதாபாத்திரம்:
வலிமை படத்தில் அஜித்தின் சகோதரி கதாபாத்திரத்தில் நடிகை Sunayana என்பவர் நடித்திருந்தார். இவர் கடந்த 1995ஆம் சௌந்தர்யா, ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அம்மன் படத்தில் அம்மன் தாயீ கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதன் பிறகு அவர் வேறு எந்த படத்திலும், திரையில் தோன்றவில்லை.
அம்மன் தாயீ:
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்த, நடிகை Sunayana தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு சகோதரியாக நடித்திருந்தது, பலரையும் ஆச்சரித்ததில் ஆழ்த்தியுள்ளது. அவரது புகைப்படம் பார்த்து பலரும் அவரா இவர் என்று நம்பவே முடியலை என்று கூறி வருகின்றனர்.
இன்னும், சிலர் படத்தில் அம்மன் தாயீ வந்ததால் தான், படம் உலகம் முழுவதிலும் சூப்பர் ஹிட்டோ என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.