Valimai: வலிமை படத்தில் விதிமுறைகள் மீறிய கட்டணம்... வசூலித்த தியேட்டர் மேலாளர்... அதிரடி காட்டிய போலீஸ்..!
Valimai: தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில், அஜித் ஒருவர். இவருடைய நடிப்பில் வெளியான படங்கள் எல்லாமே, ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் கொண்டாப்படும்.
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில், அஜித் ஒருவர். இவருடைய நடிப்பில் வெளியான படங்கள் எல்லாமே, ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் கொண்டாப்படும்.
அந்த வரிசையில், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர், எச்.வினோத் இயக்கிய வலிமை திரைப்படம் கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியாகி இருந்தது. போனிகபூர் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஏற்று கட்சிதமாக நடித்துள்ளார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில், வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்துள்ளார்.
இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இதில் கதை, பாடல்கள் என அனைத்தையும் தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்கள் பலரால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.
தற்போது வரை, படம் ரூ. 200 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், உலக பிரபலங்கள் பலரும் அஜித் மற்றும் வலிமை பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரோகிணி திரையரங்கில் புக்மை க்ஷோ செயலி மூலம், வலிமை படத்திற்கு, சென்னை பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் என்பவர் கடந்த மாதம் 20ஆம் தேதி 395 ரூபாய் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளார். இதையடுத்து,தேவராஜன் முன்பதிவு செய்த டிக்கெட்டில் 164 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டதை கண்டு, காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் தபால் மூலம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் திரையரங்கின் உரிமையாளரை அழைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விசாரணையில், கூடுதலாக வசூலிக்கப்பட்டதை திரையரங்கு மேலாளர் ஒப்பு கொண்டதாக தெரிகிறது.இதையடுத்து, போலீசாரின் உத்தரவின் பேரில், ரோஹினி திரையரங்கத்தின் மேலாளரும் பணம் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, கூடுதலாக 164 ரூபாய் தின்பண்டங்களை வாங்குவதற்காக தான் பெறப்பட்டதாகவும், ஒரு காட்சிக்கு 500 பேர் திரைப்படத்தை கண்டதாகவும் அவர்கள் அனைவருக்கும் முறையாக பணம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறி இருக்கிறார். தற்போது, இந்த செய்தி இணையத்தில் பரவி வருகிறது.