Ajith family: வலிமை படம் பார்க்க அஜித் குடும்பம்....ஷாலினியிடம் மாஸ் காட்டிய ரசிகர்கள்! வைரல் வீடியோ..!
Ajith family: நடிகர் அஜித்தின் மனைவி, பிள்ளைகள் வலிமை படம் பார்க்க திரையரங்கம் வந்துள்ளனர். அவர்களிடம் அஜித் ரசிகர்கள் மாஸ் காட்டியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகர் அஜித்தின் மனைவி, பிள்ளைகள் வலிமை படம் பார்க்க திரையரங்கம் வந்துள்ளனர். அவர்களிடம் அஜித் ரசிகர்கள் மாஸ் காட்டியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும், வெளியான வலிமை படம் ரசிகர்கள் பலரால், கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த இடத்தை எடுத்துக் கொண்டாலும் படத்தின் வசூலுக்கு மாஸ் கலெஸ்சன் உள்ளது என்கின்றனர்.
போனிகபூர் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஏற்று கட்சிதமாக நடித்துள்ளார்.
படம் வெளியாகி இன்றுடன் 13 நாட்கள் ஆகிவிட்டன. எந்த ஒரு படமும் வெளியாகாததால், மேலும் கரோனா தோற்று பாதிப்பு குறைவாக உள்ளதாலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. இதில் கதை, பாடல்கள் என அனைத்தையும் தாண்டி அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்கள் பலரால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.
வசூல் ரீதியாகவும் ஹிட்:
வசூல் ரீதியாகவும் அஜித்திற்கு விஸ்வாசம் காய் கொடுத்தது. நேர்கொண்ட பார்வைக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. இப்போது வலிமை, வசூல் ரீதியாகவும், நல்ல விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வரை, படம் ரூ. 200 கோடி வரை வசூலித்துள்ள நிலையில், உலக பிரபலங்கள் பலரும் அஜித் மற்றும் வலிமை பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களை போல திரையரங்கம் வந்த அஜித் குடும்பம்:
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அவர்களது குழந்தைகள் ரசிகர்களை போல, திரையரங்கம் வந்து படம் பார்த்தனர். அஜித் குடும்பம் எப்போதும் முதல் நாள் முதல் ஷோ ரசிகர்களுடன் இணைந்து பார்ப்பது வழக்கம். தற்போது, 13 நாட்களுக்கு பிறகு திரையரங்கம் வந்த அவர்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேறுபு கொடுத்தனர். அதில், ரசிகர் ஒருவர் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ஷாலினிடம், ஹாய் மேடம் அஜித் சாரை கேட்டதாக கூறுங்கள் என கூறுகிறார். அந்த வீடியோ இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ..