பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் இர்ஃபான் கான். பாலிவுட்டில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற லைஃப் ஆஃப் பை, பிகு, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இர்ஃபான் கான். ஹாலிவுட்டில் கூட அமேசிங் ஸ்பைடர்மேன், ஜூராஸிக் வேர்ல்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

2018ம் ஆண்டு நியூரோ எண்டோகிரைன் என்ற புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் 54 வயதான இர்ஃபான் கான் தனது குடும்பத்தினரை சோகத்தில் மூழ்கடித்துவிட்டு காலமானார். 

இந்த செய்தியைக் கேட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது தான் இர்பான் கான் காலமானார் என்ற செய்தி கிடைத்தது. இது மிகவும் பாதிக்க கூடிய சோகமான செய்தி... அளவிட முடியாத திறமை, கருணை கொண்ட சக நடிகர்... சினிமா உலகிற்கு ஒரு சிறந்த பங்களிப்பாளர்... எங்களை இவ்வளவு சீக்கிரம் பிரிந்துவிட்டார்.... ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை உருவாக்கிவிட்டார்.... அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

தயாரிப்பாளர், நடிகர், தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்ட கரண் ஜோகர், அழியாத திரைப்பட நினைவுகளை தந்ததற்கு நன்றி... ஒரு கலைஞராக உங்களது உயரத்தை உயர்த்தியதற்கு நன்றி... எங்கள் சினிமாவை வளப்படுத்தியதற்கு நன்றி... நாங்கள் உங்களை மிகவும் மோசமாக மிஸ் செய்யப்போகிறோம், ஆனால் எங்களது வாழ்க்கையில் நீங்கள் இருந்ததற்கு நன்றியுடன் இருப்போம்... எங்களது சினிமா உங்களுக்கு வணக்கம் செலுத்துகிறது... என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

 என்ன ஒரு பயங்கரமான செய்தி... திடீரென மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான இர்ஃபான் கான் இறந்த செய்தி வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்திற்கு கடவுள் பலம் சேர்க்கட்டும் என்று பாலிவுட் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமார் பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: பிரபல ஹாலிவுட், பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

அஜய் தேவ்கன், இர்ஃபான் கானின் மரண செய்தியை கேள்விப்பட்டு மனம் உடைந்துவிட்டது. அவரது மறைவு இந்திய சினிமாவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது மனைவி மற்றும் மகன்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் பிரியங்கா சோப்ரா, டாப்ஸி, அபிஷேக் பச்சன், சோனம் கபூர், ஷாகித் கபூர் உட்பட ஏராளமான திரைத்துறை பிரபலங்கள் தங்களது இரங்கலை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.