நடிகை அமலாபால் தற்போது தனது வெக்கேஷனை என்ஜாய் செய்து வரும் நிலையில், டூ பீஸ் உடையில்.. கொட்டும் அருவி நீரில் குளித்து அலப்பறை செய்யும் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அமலா பால், திருமணத்திற்கு பின்னர், குடும்பத்தினர் நடிக்க கூடாது என கூறியதில் உடன்பாடு இல்லாமல், காதல் கணவர் ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்ததாக கூறப்பட்ட நிலையில், விவாகரத்துக்கு பின்னர் மீண்டும் பழையபடி திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.

விவாகரத்துக்கு முன்னதாக இவர் நடித்த பசங்க 2, அம்மா கணக்கு, போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும்... விவாகரத்துக்கு பின்னர் இவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக இவர் கதையின் நாயகியாக நடித்து வெளியான ஆடை படத்தில்... எல்லை மீறிய கவர்ச்சியை காட்டியது இவரின் கேரியருகே உலை வைத்தது. இதனை காரணம் காட்டி சில பட வாய்ப்புகளை அமலா பால் இழந்ததாகவும் கூறப்பட்டது.

மளமளவென வளர்ந்து விட்ட அஜித்தின் மகன் ஆத்விக்குடன் நேரு ஸ்டேடியத்தில் ஷாலினி அஜித்! வைரலாகும் போட்டோ!

தற்போது தமிழில் அமலா பால் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் 'அதோ அந்த பறவை போல '. இப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. மேலும் மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். திரைப்படத்தை தாண்டி சில வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் அவ்வப்போது சில காதல் சர்ச்சைகளில் சிக்கி வரும் அமலா பால் தற்போது 2 பீஸ் உடையில், குளித்து கும்மாளம் போடும், வீடியோ ஒன்றை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பு இல்லாதா நாட்களில், கோவில்களுக்கு, மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், தற்போது சென்றுள்ள இடத்தில் கொட்டும் அருவியில் குளிப்பது, பாறையின் மேலே ஏறி டைவ் அடிப்பது, நீச்சல் அடிப்பது, ஊஞ்சலில் ஜாலியாக ஆட்டம் ஓடுவது என அலப்பறை செய்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

நடனத்தில் ஜோதிகாவை பீட் பண்ணனும்.. 'சந்திரமுகி 2' படத்திற்காக கலா மாஸ்டரை மும்பைக்கு வர வைத்த கங்கனா!

View post on Instagram