மளமளவென வளர்ந்து விட்ட அஜித்தின் மகன் ஆத்விக்குடன் நேரு ஸ்டேடியத்தில் ஷாலினி அஜித்! வைரலாகும் போட்டோ!
பிரபல நடிகையும், நடிகர் அஜித்தின் காதல் மனைவியுமான ஷாலினி அஜித், தற்போது தன்னுடைய மகன் ஆத்விக் மற்றும் மகனின் நண்பர்களுடன் நேரு ஸ்டேடியத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி அஜித் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படம் 300 கோடி வசூல் சாதனை படைத்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு மிக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, அஜித் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளது 90% உறுதியாகி உள்ள போதிலும், இன்னும் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை, அஜித்தின் 62 ஆவது படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனம் வெளியிடவில்லை.
14 வருடங்களுக்கு பின் ஒன்று சேரும் ஈரம் கூட்டணி..! ஆதிக்கு ஜோடியாகும் நடிகை லட்சுமி மேனன்..!
இப்படத்தின் படபிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஜித் படப்பிடிப்புக்கு முன்னதாக தன்னுடைய குடும்பத்துடன் போர்ச்சுகளுக்கு சென்று வெகேஷனை செலபிரேட் செய்து விட்டு மீண்டும் சென்னை திரும்பி உள்ளார்.
இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி.. தன்னுடைய மகன் மற்றும் அவருடைய நண்பர்களுடன் நேரு ஸ்டேடியத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அஜித் பற்றி எந்த தகவல் வெளியானாலும் எப்படி அந்த செய்தியை வைரலாக்கி விடுகிறார்களோ, அதே போல் அவரின் மகன் மற்றும் குடும்பத்தை பற்றி எந்த செய்தி வந்தாலும், அந்த தகவல் படு வைரலாகி விடும். அப்படி தான் இந்த புகைப்படமும் அஜித் ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
ஆத்விக் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியை காண தன்னுடைய நண்பர்கள் மற்றும் அம்மா ஷாலினியுடன் வந்தபோது இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. சென்னையின் FC & North East FC போட்டியை காண சென்னை அணியின் சீருடை அணிந்து ஆத்விக் மற்றும் அவரின் நண்பர்கள் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.