பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.  அந்த சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா அனைவரது மனைதையும் ஈசியாக கொள்ளையடித்தார். "குளிர் 100" படத்தில் ஹீரோவாக நடித்தவர் சஞ்சீவ். இவர் தான் "ராஜா, ராணி" தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். சீரியலில் சின்னய்யா...சின்னய்யா... என்று கொஞ்சிய ஆல்யா ரசிகர்கள் மனதை மட்டுமல்ல சஞ்சீவையும் கவர்ந்தார். ஏற்கனவே காதலித்து வந்த சதீஷ் என்பவரை பிரேக் அப் செய்து விலகிய ஆல்யா, சஞ்சீவ் மீது காதல் கொண்டார். 

காதலில் கசிந்துருகிய ஆல்யா மானசா , சஞ்சீவ் ஜோடி வெற்றிகரமாக திருமணமும் செய்து கொண்டனர். இளசுகளை கவர்ந்த இந்த ஜோடி மீண்டும் வேறு ஏதாவது சீரியலில் ஒன்றாக இணைவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த சமயத்தில், ஆல்யா மானசா கர்ப்பமானார். இதனால் சஞ்சீவ் மட்டும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இதையடுத்து நிறைமாத கர்ப்பிணியான ஆல்யா மானசா தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். 

இதையும் படிங்க: அந்த மூன்று நாட்களில் இதை கட்டாயம் செய்யுங்கள்... போட்டோவுடன் பிரபல நடிகை வெளியிட்ட சூப்பர் யோசனை...!

மேலும் விஜய் டி.வி. நடத்தி வந்த டான்சிங் சூப்பர் ச்டார் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்தார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஆல்யாவிற்கு அந்த நிகழ்ச்சியின் போது வளைகாப்பு நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஆல்யா மானசாவின் பெற்றோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்களது செல்ல மகளுக்கு ஐலா சையத் என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது லாக்டவுன் சமயத்தில் அனைவரும் தங்களது பழைய மறக்க முடியாத நினைவுகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சஞ்சீவ், ஆல்யா செய்த தப்பிற்காக நடுரோட்டில் வைத்து வித்தியாசமான தண்டனை ஒன்றை கொடுத்திருந்தார். அந்த வீடியோவை தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இதையும் படிங்க: “டாப் ஆங்கிளில் மொத்தமும் தெரியுது”... பிரபல நடிகையின் கவர்ச்சி உடையை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

ஆல்யா மானசா ஒரு முறை சஞ்சீவுக்கு பிடிக்காத விஷயத்தை செய்து விட்டாராம். ஆலியா பல முறை மன்னிப்பு கேட்டும் சஞ்சீவ் சமாதானம் ஆகாதது போல முகத்தை வைத்துள்ளார். பின் திடீர் என காரை நிறுத்தி செய்த தவறுக்காக அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு மிகவும் சத்தமாக "சஞ்சீவ் ஐ லவ் யூ' என்று சொல்லு என கூறியுள்ளார்.  ஆலியாவும் முதலில் கூச்சத்துடன் மெதுவாக ஐ லவ் யூ என சொல்ல அதனை ஏற்று கொள்ளாத சஞ்சீவ் சத்தமாக கூறவேண்டும் என கூறியுள்ளார்.பின் ஆலியா வேறு வழி இல்லாமல் சத்தமாக அதுவும் நடு ரோட்டில் நின்று சஞ்சீவ் ஐ லவ் யூ என்று கத்திய படி ஓடிவருகிறார். தங்களது காதல் வாழ்க்கையின் மறக்க முடியாத நினைவான இதை சஞ்சீவ் மீண்டும் ஷேர் செய்து உருகியுள்ளார்.