அக்ஷய் குமார் நடித்துள்ள 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்! டைட்டில் வெளியாவதற்கு.. முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
அக்சய் குமார் நடிக்கும், 'சூரரைப் போற்று' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ள, புரொடக்ஷன் 27' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா, இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. தமிழில் வெளியான இந்த திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவே , இந்தியிலும் இப்படத்தை இயக்கியுள்ளார் .
Breaking: 'அசத்தப்போவது யாரு' ஸ்டாண்ட் அப் காமெடியன் கோவை குணா அதிர்ச்சி மரணம்! சோகத்தில் ரசிகர்கள்!
இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்சய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை, அபன்டண்சியா எண்டர்டெய்ன்மென்ட், கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் 2 டி எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அருணா பாட்டியா, ஜோதிகா, சூர்யா, விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 'புரொடக்சன் 27' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த இந்தி திரைப்படம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த அறிவிப்பால் அக்சய் குமாரின் ரசிகர்கள் ரசிகர்கள் மட்டும் இன்றி சூர்யா ரசிகர்களும் உச்சாகமடைந்துள்ளனர்.
44 வயதில்... அருவி சீரியல் நடிகை லாவண்யாவுக்கு நடந்த திருமணம்! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
காரணம் இப்படத்தில் அக்ஷய் குமாருடன் சூர்யாவும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதை, படக்குழு ரகசியமாகவே வைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் மூலம் சூர்யா இந்தி திரையுலகில் முதல் முறையாக தயாரிப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.