3 வீடு மாறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் நகை லாக்கர்! ஏமாந்த நேரத்தில் அபேஸ் செய்த கில்லாடி பெண்! சிக்கியது எப்படி?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, யார் நகைகளை திருடியது என கண்டுபிடித்துள்ள காவல் துறை தற்போது 20 பவுன் நகைகளை மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள், திடீரென கடந்தாண்டு விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தனர்.
மேலும் இதுவரை அவர்களின் விவாகரத்து மனு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று ஒரு தரப்பு கூறி வந்தாலும், மற்றொரு தரப்பு இருவரும் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்து விட்டதாக கூறி வருகின்றனர்.
தனுஷுடனான விவாகரத்து முடிவுக்கு பின்னர், தற்போது ஐஸ்வர்யா தன்னுடைய தந்தை ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 60 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வெளியான தகவலில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 60 பவுன் தங்கம், வைரம், மற்றும் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட பாரம்பரிய நகைகள் கடந்த மாதம், 9-ஆம் தேதி... அவரின் லாக்களில் இருந்து திருடப்பட்டுள்ளது. இது பற்றி உடனடியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் மூன்று பேருக்கு மட்டுமே தன்னுடைய நகை லாக்கரின் சாவி எங்கு உள்ளது என்பது தெரியும் என்பதால் அந்த மூவர் மீதும் சந்தேகம் உள்ளதாக கூறி தெரிவித்திருந்தார்.

எனவே இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உள்ள வேலைக்காரர்கள்... செய்திருப்பார்களோ என்கிற சந்தேகத்தில் முதல் கட்ட விசாரணையை அவர்களிடம் இருந்து துவங்கியுள்ளனர். இந்த விசாரணையின் போது, பயந்தபடி... கேள்விகளுக்கு எடக்கு மடக்காக பதில் கூறிய வேலைக்கார பெண் ஈஸ்வரி (40) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
ஸ்ருதி ஹாசன் - சித்தார்த் லவ் பிரேக்கப்புக்கு காரணம் சூர்யாவா? இது என்னடா புது புரளியா இருக்கு..!
பின்னர் அவரின் சமீபத்திய வங்கி கணக்கை பரிசோதனை செய்ததன் மூலம் இந்த தகவலை உறுதி செய்த போலீசார், தற்போது அவரிடமிருந்து இருபது பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்து மீதம் 40 பவுன் நகைகள் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிபால் கூறியுள்ளார்.