"படே மியன் சோட்டே மியன்" படத்தின் டைட்டில் டிராக் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அபுதாபியின் ஜெராஷ்-இல் உள்ள மிக அழகிய ரோமன் தியேட்டர் பின்னணியில் படமாக்கப்படும் முதல் பாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.  

பாலிவுட்டில் அதிரடியை கிளப்பும் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஜோடி தங்களது திரை மாயாஜாலத்தால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்த காத்திருக்கிறது. டைட்டில் டிராக் வெறும் பாடல் என்பதோடு, 100-க்கும் அதிக நடன கலைஞர்களுடன் பிரமாண்டமாக தயாராகிறது. டைட்டில் டிராக் பாடலை அனிருத் ரவிச்சந்தர் மற்றும் விஷால் மிஷ்ரா பாடியுள்ளனர். இதற்கு பாஸ்கோ - சீசர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். ரசிகர்கள் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் வகையிலான இந்த பாடல் வரிகளை இர்ஷாத் கமில் எழுதியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Anna Serial: இசக்கியை மிரட்டி பணிய வைத்த முத்துப்பாண்டி.! பாக்கியம் கொடுத்த பதிலடி - அண்ணா சீரியல் அப்டேட்!

"படே மியன் சோட்டே மியன் பாடல் இளைஞர்களை கவரும் வகையில் பிரமாண்ட காட்சிகளை கொண்டிருக்கும். இந்த பாடலில் வித்தியாசமான ஒலியை விஷால் மிஷ்ரா பயன்படுத்தியுள்ளார். இதற்கு அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்து ஆடி பாடலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர். அனைவரும் ரசிக்கும் படி இந்த பாடலை உருவாக்கி இருக்கிறோம். இந்த பாடலின் ஹுக்லைன் இசை பிரியர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும்," என்று தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி தெரிவித்தார். 

Karthigai Deepam: பாராட்டு மழையில் கார்த்திக்! பயத்தில் பதறும் அபிராமி.! என்ன ஆச்சு? கார்த்திகை தீபம் அப்டேட்!

சகோதரத்துவத்தை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் பாடலுக்கு தயாராகுங்கள். அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் உங்களை கவர காத்திருக்கின்றனர். ஏ.ஏ.இசட். ஃபிலிம்ஸ் சார்பில் வாஷூ பக்னானி மற்றும் பூஜா என்டர்டெயின்மென்ட் இணைந்து படே மியன் சோட்டே மியனை வழங்குகின்றன. இந்த படத்தை அலி அப்பாஸ் ஸாஃபர் இயக்கியுள்ளார். வாஷூ பக்னானி தயாரிக்கும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
Bade Miyan Chote Miyan - Title Track | Akshay Kumar , Tiger Shroff | Vishal Mishra,Anirudh,Irshad K