தல அஜித், 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கிய தகவலை அஜித் படக்குழுவினரிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: பாகுபலி நாயகன் ராணா திருமணம் செய்துகொள்ள உள்ள அவரது காதலி மிஹீகா பற்றிய ஆச்சர்ய தகவல்கள்!
 

'வலிமை' படத்தின் படப்பிடிப்பு பணிகள் 70 சதவீதம் முடிவடைந்த நிலையில், திடீர் என இந்தியா முழுவதும் கொரோனா பிரச்சனை தலை தூங்கியதால், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால், அதிக தொழிலாளர்களுடன் பணிபுரிய கூடிய, சில தொழில்நிறுவங்கள், மற்றும் திரையுலகை சேர்ந்த பணிகளுக்கு அரசு நிபந்தனையுடன் கூடிய தடை விதித்துள்ளது. சீரியல் பணிகளை 60 பேருடன் மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ள அரசு, இதுவரை திரைப்பட ஷூட்டிங் பணிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை.

மேலும் செய்திகள்:மீரா மிதுனை காரி துப்பி கேவலமாக பேசிய ஜி.பி.முத்து..! வாயை விட்டு வேட்டு வைத்து கொண்ட வீடியோ..!
 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கொரோனா பிரச்சனை முழுவதுமாக முடிவுக்கு வந்த பின்னர் மட்டுமே ஷூட்டிங் பணிகள் துவங்க வேண்டும் என, படக்குழுவினரிடம் அஜித் வலியுறுத்தி உள்ளதாகவும். ஒவ்வொரு தொழிலாளர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதால் இந்த முடிவை அஜித் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே 'வலிமை' திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவதில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அநேகமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் துவங்கி, அடுத்த கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.