சூர்யா - விஜய் மாற்றும் அவர்களுடைய மனைவிகள் பற்றி வாயிக்கு வந்தவற்றை எல்லாம் பேசி, ரசிகர்களிடம் வாங்கி கட்டி கொள்ளும் மீரா மிதுனை, கண்டித்து ஜி.பி.முத்து வெளியிட்டுள்ள வீடியோவை, மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.

சீன பொழுது போக்கு செயலிகள் மூலம், பலர் பிரபலமடைந்துள்ளனர். டிக் டாக், ஹெலோ  போன்றவற்றில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, சிலர் வெள்ளித்திரையில் நடிகர், நடிகையாகவும் மாறியுள்ளனர். அந்த வகையில், கருத்தே இல்லாமல், காமெடி என்கிற பெயரில் கண்டதை பேசி பலரிடம் சகட்டு மேனிக்கு திட்டு வாங்கியே பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து.

அதிலும், செத்த பயலே... நாரா பயலே என,  இவர் தன்னை கழுவி கழுவி ஊற்றியவர்களுக்கு கமெண்ட் செய்து திட்ட, அதற்கு ஒரு படி மேல் போய், கேட்க முடியாத வார்த்தைகளால் இவரை அவர்கள் திட்டுவார்கள். போர் அடிக்கும் போதெல்லாம் திட்டி... திட்டி... விளையாடுவது தான் இவர்கள் பொழப்பே...

எப்படியோ இவர் முகம் அனைவருக்கும் தெரிய துவங்கியதும், இவர் ரவுடி பேபி சூர்யாவுடன் செய்த காதல் லீலைகள் பல. சூர்யா ஜி.பி.முத்துவை மாமா என அழைக்க, அதற்கு இவர் அன்பே... ஆருயிரே என உருகிய வீடியோக்கள் டிக்-டாக்கில் ரொம்ப பிரபலம். இருவரும் ஒன்றாக சேர்ந்து, டிக் டாக்கில் கூடி கும்மியடித்து வீடியோக்காய்  சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், இப்படி தினமும் டிக்-டாக் பல பஞ்சாயத்துக்களை வாண்டடாக போய் சந்தித்து வந்த இவர்களை போன்ற பலருக்கு டிக்-டாக் இல்லாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது திறமையை வெளிக்காட்டும் இடமாக இருந்த, சீன செயலிகளை இந்தியாவில் மொத்தம் 14 மொழிகளில் செயல்பட்டு வந்தவை தடை செய்யப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில், இப்படி தினமும் டிக்-டாக் பல பஞ்சாயத்துக்களை வாண்டடாக போய் சந்தித்து வந்த இவர்களை போன்ற பலருக்கு டிக்-டாக் இல்லாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது திறமையை வெளிக்காட்டும் இடமாக இருந்த, சீன செயலிகளை இந்தியாவில் மொத்தம் 14 மொழிகளில் செயல்பட்டு வந்தவை தடை செய்யப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தற்போது டிக் டாக்குக்கு பதில்  சமீப காலமாக பேஸ்புக் மூலம் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது வனிதாவை தொடர்ந்து மிகவும் ஹாட் டாப்பிக்காக உள்ள மீரா மிதுன், விஜய் - சூர்யா வாரிசு நடிகர்கள் என்றும், கமல் - திரிஷா ஆகியோர் ஜாதி மூலம் இன்னும் திரையுலகில் நீடித்து நிற்பதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இவரை கண்டிக்கும் விதமாக ஜி.பி.முத்து வழக்கம் போல் இவரை தன்னுடைய ஸ்டைலில் மோசமாக திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை மீராமீதுன் வெளியிட்டு, அவர் மீது தன்னுடைய லாயர் மூலம் நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் குறிப்பிட்ட சமூகத்தாரை பற்றி பேசியதால் ஜி.பி.முத்து மீது புகார் அளிக்கப்பட்டு பின்னர் அவர் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.