குட் பேட் அக்லி படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் பற்றிய அப்டேட் கசிந்துள்ளது.
Ajithkumar's AK64 Movie Director Update : தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக வலம் வரும் அஜித் குமாரின் 64வது படமான AK64 பற்றிய புதிய அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களின்படி, படத்தைப் பற்றி பல்வேறு விஷயங்கள் வெளியாகின்றன. இந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் குமாரின் முந்தைய படமான குட் பேட் அக்லி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பிறகு, அஜித்தின் அடுத்த படமான AK64 பற்றிய யூகங்களும் விவாதங்களும் சூடுபிடித்துள்ளன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், படப்பிடிப்பு அட்டவணை போன்ற தகவல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் முக்கிய ஊடகங்களில் பரவி வருகின்றன. கடந்த மே மாதம் வெளியான அஜித்தின் ஒரு பேட்டியில், அடுத்த படம் 2025 நவம்பரில் தொடங்கும் என்று கூறியிருந்தார். ஆனால் அதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை.

ஏகே 64 இயக்கப்போவது யார்?
AK64 ஒரு குறுகிய காலத்தில் முடியும் படமாக இருக்கும் என்று சில அஜித் ரசிகர் பக்கங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் தயாரிப்பாளர்களாக லைகா புரொடக்சன்ஸ், சன் பிக்சர்ஸ் போன்ற பெயர்கள் கோலிவுட்டில் பரவி வருகின்றன. படத்தை யார் இயக்குவார்கள் என்ற கேள்விக்கு, பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், ஆதிக் ரவிச்சந்திரன் போன்றவர்களின் பெயர்கள் அதிகம் அடிபடுகின்றன.
லேட்டஸ்ட் தகவலின் படி, நடிகர் அஜித் மீண்டும் எச். வினோத்துடன் இணைவார் என்றும் தகவல்கள் உலவுகின்றன. ஜூலை முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் படம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஏப்ரல்-மே கோடை விடுமுறையை இலக்காகக் கொண்டு படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் எச்.வினோத் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார். இது நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
