கார் பிரியரான நடிகர் அஜித்குமார் தன்னுடைய ட்ரீம் கார் ஒன்றை பல கோடி செலவு செய்து சொந்தமாக வாங்கி இருக்கிறார்.
Ajith Dream Car McLaren Senna : நடிகர் அஜித் தன்னுடைய கனவு காரை வாங்கி இருக்கிறார். அவர் கார் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாக ஏராளமான கார்களை வாங்கிக் குவித்து வருகிறார். அண்மையில் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக ஃபெராரி, போர்ஸே போன்ற காஸ்ட்லி கார்களை வாங்கிய அஜித் குமார், தற்போது ஒரு ஸ்பெஷல் எடிசன் கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். உலகத்தில் ஒட்டுமொத்தமாக 500 பேரிடம் மட்டுமே இந்த கார் உள்ளதாம்.
அஜித் வாங்கிய புது காரின் ஸ்பெஷல் என்ன?
நடிகர் அஜித் புதிதாக வாங்கியுள்ள காரின் பெயர் McLaren Senna. மறைந்த பார்முலா 1 கார் ரேஸ் வீரர் அயர்டன் சென்னாவின் நினைவாக இந்த கார் உருவாக்கப்படுகிறது. அயர்டன் சென்னா நடிகர் அஜித்தின் ரோல் மாடல். அண்மையில் அவரின் நினைவுச் சிலை முன் மண்டியிட்டு கண்ணீர் மல்க நடிகர் அஜித் அஞ்சலி செலுத்திய வீடியோ வைரலானது. அவரைப் பார்த்து தான் அஜித்துக்கு கார் ரேஸின் மீது ஆர்வம் வந்துள்ளது. இதனால் அவர் நினைவாக இந்த காரை வாங்கி இருக்கிறார் அஜித்.

அஜித் வாங்கிய McLaren Senna காரின் விலை எவ்வளவு?
McLaren Senna காரின் விலை ரூ.15 கோடியாம். உலகில் வெறும் 500 பேரிடம் மட்டுமே இந்த ஸ்பெஷல் எடிசன் கார் உள்ளதாம். அதில் நடிகர் அஜித்தும் ஒருவர். இந்த காரை வாங்கிய கையோடு, அதை முதன்முறையாக அவர் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் ரோல் மாடலான அயர்டன் சென்னா கடந்த 1994-ம் ஆண்டு நடந்த கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலியானார். அவரின் நினைவாக தான் இந்த McLaren Senna கார் ஸ்பெஷல் எடிசன் வெளியிடப்பட்டு உள்ளது.
நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸில் பிசியாக உள்ளார். அவர் துபாய் மற்றும் ஐரோப்பிய கார் பந்தயங்களில் பங்கேற்று வெற்றியும் பெற்றார். இதையடுத்து அடுத்தக்கட்ட கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக ஆயத்தமாகி வருகிறார். வருகிற நவம்பர் மாதம் வரை கார் பந்தயங்களில் பங்குபெற முடிவெடுத்துள்ள அஜித், அதன் பின்னரே தன்னுடைய அடுத்த பட பணிகளை தொடங்க இருக்கிறாராம். அவர் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
