தல அஜித் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 29 ஆண்டுகள் நிறைவடைந்ததை, வித்தியாசமான கமான் டிபி வெளியிட்டு வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள், தல ரசிகர்கள்.  

தல அஜித் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 29 ஆண்டுகள் நிறைவடைந்ததை, வித்தியாசமான கமான் டிபி வெளியிட்டு வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள், தல ரசிகர்கள்.

மேலும் செய்திகள்: அஜித்தின் 62-வது படத்தை இயக்க போவது இவரா? வெளியான ஆச்சர்ய தகவல்.!
 

அஜித் எடுத்ததுமே திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் கொடுக்க வில்லை. கடந்த 1990 ஆம் ஆண்டு, இயக்குனர் செண்பக ராமன் என்பவர் இயக்கிய, 'என் வீடு என் கணவர்' என்கிற படத்தில் கியூட் ஸ்கூல் பாய்யாக அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் சுரேஷ் மற்றும் ஹீரோயினாக நதியா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து தான் 1993 ஆம் ஆண்டு, 'அமராவதி' படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அஜித்துக்கு கிடைத்தது. இயக்குனர் செல்வா இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே அஜித்துக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகளும் குவிந்தது.

இந்த 29 வருடங்களில், பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் தல. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான, பவித்ரா, ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, அமர்க்களம் , தீனா, சிட்டிசன், பில்லா 2 , வீரம், வேதாளம், நேர்கொண்ட பார்வையை போன்ற படங்கள் ரசிகர்கள் மனதில் இருந்து எப்போதுமே நீங்காத இடம் பிடித்தவை. 

மேலும் செய்திகள்: குழந்தையை கொஞ்சும் புகைப்படத்தோடு... மகன் பெயரை அறிவித்த சிவகார்த்திகேயன்..! வைரலாகும் போட்டோ ..!
 

இந்த படங்களின் வரிசையில், அஜித் இரண்டாவது முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் அவரது 60 ஆவது படமான வலிமையையும் இணையும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏற்கனவே நேற்று வலிமை படத்தில் இருந்து இரவு 10:45 மணிக்கு வெளியான 'வேற மாறி' பாடலை வெறித்தனமாக ரசிகர்கள் ட்ரெண்டே செய்து வரும் நிலையில், இன்று அஜித் திரையுலகில் நுழைந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30 வருடம் துவங்குவதையும் கமான் டிபி வெளியிட்டு... #29YrsOfinvincibleTHALA   என்கிற ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: தண்ணீருக்குள் மூழ்கி Pregnancy போட்டோ ஷூட்..! 'பாரதி கண்ணம்மா' ஃபரீனாவின் பிரமிக்க வைக்கும் போட்டோஸ்..!
 

மேலும் தற்போது வெளியிடப்பட்டுள்ள கமான் டிபி பிரபலங்கள் பலராலும் ஷேர் செய்யப்பட்டு... ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

Scroll to load tweet…