குழந்தையை கொஞ்சும் புகைப்படத்தோடு... மகன் பெயரை அறிவித்த சிவகார்த்திகேயன்..! வைரலாகும் போட்டோ ..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில், தற்போது மகனை கொஞ்சும் புகைபடம் வெளியிட்டு, பெயரையும் அறிவித்துள்ளார்.
சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்து, தன்னுடைய திறமையால் தொகுப்பாளர், துணை நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர், பாடகராகவும் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். பல பிரபலங்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு வளர்ந்து, அதிக சம்பளம் பெரும் நடிகராக உள்ளார் சிவகார்த்திகேயன்.
இவருக்கு இவருடைய மாமன் மகள், ஆர்த்தியுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு ஆராதனா என்கிற மகளும் உள்ளார். சிவகார்த்திகேயன் மகளும், 'கனா' படத்தில் 'வாயாடி பெத்த பிள்ளை' என்கிற பாடல் பாடியதன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலம்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதல் சட்ட மன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த போதே, ஆர்த்தி கர்ப்பமாக உள்ளதாக அவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில், இதுகுறித்து சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் தனக்கு மகன் பிறந்த தகவலை மிகவும் உணவு பூர்வமாக வெளிப்படுத்தி இருந்தார் சிவகார்த்திகேயன். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார். என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி.அம்மாவும் குழந்தையும் நலம் என்று தெரிவித்திருந்தார்.
sivkarthikeyan
தற்போது தன்னுடைய மகனை கொஞ்சும் புகைபடம் ஒன்றை வெளியிட்டு மகனின் பெயர் குகன் தாஸ் என அறிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் தாஸ், எனவே தந்தையின் பெயரையே தாற்போது மகனுக்கு சூட்டி அழகு பார்த்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் “குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம். என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.