தற்போது அஜித் நடிக்க உள்ள 62 ஆவது படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்திலேயே நடிப்பார் என கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, தற்போது அஜித் நடிக்க உள்ள 62 ஆவது படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னணி நடிகர்கள் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்து அவ்வப்போது பல்வேறு சுவாரஸ்ய தகவல் வெளியாகி வருகிறது. சில தகவல்கள் வதந்தியாக கடந்து சென்றாலும் , சில தகவல்கள் உண்மையாகி விடுகிறது. அந்த வகையில்... அஜித் ஒரு படம் நடித்து முடிப்பதற்கு முன்பாகவே அவர் அடுத்தடுத்த படங்களின் இயக்குனர்கள் யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பும், அதனை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே தல அஜித், 'வலிமை' படத்திற்கு பின், மூன்றாவது முறையாக எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் அஜித் நடிப்பார் என்கிற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தன்னுடைய 62 ஆவது படத்தை பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாகவும், இதற்கான பேச்சு வார்த்தைகள் கூட தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித், விஜய், ரஜினிகாந்த், போன்ற முன்னணி பிரபலங்களை பொறுத்தவரை ஒரு படம் முடிந்த பிறகே... அவர்களின் அடுத்த படத்தின் இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் குறித்து தகவல் வெளியாகும். அஜித்தின், 62 ஆவது படம் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல், எந்த அளவிற்கு உண்மை என்பது, இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது தான் தெரியவரும். அது வரை கார்த்திருப்போம்...