தண்ணீருக்குள் மூழ்கி Pregnancy போட்டோ ஷூட்..! 'பாரதி கண்ணம்மா' ஃபரீனாவின் பிரமிக்க வைக்கும் போட்டோஸ்..!
'பாரதி கண்ணம்மா' சீரியல் வில்லி ஃபரீனா சமீபத்தில் 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தாற்போது அண்டர் வாட்டர் Pregnancy போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
farina
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.
farina
இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே எந்த அளவிற்கு பிரபலமோ... அதே அளவிற்கு, வில்லியாக நடித்து வரும் வெண்பாவும் மிகவும் பிரபலம் தான்.
farina
கண்ணம்மாவின் கணவரும், தன்னுடைய பாலிய நண்பருமான நாயகன் பாரதியை திருமணம் செய்து கொள்ள, இவர் செய்யும் வில்லத்தனம் எல்லாம் பார்பவர்களையே கோபமடைய செய்யும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை முரட்டு தனமாக வெளிப்படுத்தி வருகிறார். உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட, காதலி கண்ணம்மாவை தற்போது பாரதி பிரிந்திருக்க காரணமும் இந்த வில்லி வெண்பா தான்.
farina
இந்நிலையில் இவர் கடந்த வாரம் மிகவும் சந்தோஷமான செய்தி ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
farina
கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடைய கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஃபரீனா தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
farina
இதை தொடர்ந்து இவர், மிகவும் வித்தியாசமாக வயிற்றில் மெஹந்தி வரைந்து வெளியிட்ட புகைப்படம், சிலர் மத்தியில் பாராட்டுகளை பெற்றாலும், சிலர் வன்மையாக இவரது செயலை கண்டித்து இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டனர்.
farina
இதற்க்கு பரீனாவும் பதிலடி கொடுத்தார். எப்போதுமே ஏதேனும் வித்தியாசமாக செய்து தன்னுடைய கற்பகாலத்தை சிறப்பித்து வரும் ஃபரினா... ரெட் கலர் உடையில் அண்டர் வாட்டர் போட்டோ ஷூட் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.