தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கும் தல அஜித்திற்கு இந்த மாதம் (மே 1ம் தேதி) தான் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் . ரசிகர்கள் மன்றத்தை கலைத்துவிட்டாலும், தல அஜித் மீது பாசத்தை பொழியும்  ஃபேன்ஸ் கூட்டத்திற்கு சற்றும் குறைவில்லை. தனது சினிமா சம்பந்தமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, திரைத்துறை சம்மந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார் என்றாலும் அவரது ரசிகர்கள் மத்தியில் தல -க்கு கொஞ்சம் கூட மவுசு குறையவில்லை. 

மேலும் செய்திகள்: கிடப்பில் போட்ட விஜய் சேதுபதி படத்துக்கு கீ கொடுக்கும் படக்குழு! ரிலீஸ் செய்ய அவசர அவசரமாக நடக்கும் வேலை!
 

இப்போது தான் அஜித் ஒரு சில காரணங்களால் எந்த தொலைக்காட்சிக்கும், ஊடகத்திற்கும் பேட்டி கொடுப்பது இல்லை என்றாலும், வளர்ந்து  வந்த காலங்களிலும் முன்னணி நடிகராக இருந்த போதிலும் கூட பேட்டிகள் கொடுத்துள்ளார். அந்த வகையில் இவர் ரெடிஃப் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் பேசிய சில விஷயங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

இந்த பேட்டியில்  பேசியுள்ள அவர், திரைப்படங்கள் நடிக்க துவங்கிய ஆரம்ப காலத்தில் அதிக கடன்கள் இருந்தது. அதே நேரத்தில் கிரிக்கெட் மற்றும் ரேஸ் போன்றவற்றில் தான் அதிக ஆர்வம் இருந்தது எனவே ''தன்னுடைய 6வது படமான ஆசை'க்கு பிறகு நான் தொடர்ந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் 'ஆசை' படம் வெளியாகி மாபெரும் ஹிட். என் கடன்களை அடைத்து பிறகு மீண்டும் வியாபாரத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தேன்.

மேலும் செய்திகள்:37 வருடத்திற்கு பின் உருவாகிறது ’முந்தானை முடிச்சு’ ரீமேக்...! பாக்யராஜூடன் இணையும் முன்னணி நடிகர்!
 

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அது முடியாமல் போனது. முதல் படம் வெளியானதும் விபத்தில் சிக்கினேன்அதன் காரணமாக என்னால் ரேஸிங்கில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். திரையுலகை  அஜித் ஒதுங்க நினைத்தாலும் விதி அவரை திரையுலகை விட்டு விலக விடாமல் தற்போது வரை நடிக்க வைத்து விட்டது.