ஜவான் படம் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் ஷாருக்கான், நயன் தாரா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பிரபலமான இயக்குனர்களில் அட்லியும் ஒருவர். ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லி தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்தின் மூலம் ரசிகர்களை அட்லி கவர்ந்தாலும், அவர் மௌன ராகம் படத்தை அப்படியே காப்பி அடித்து எடுத்திருப்பதாக விமர்சனம் எழுந்தது. எனினும் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய்யை வைத்து படம் இயக்கிய அட்லி தொடர்ந்து ஹிட் கொடுத்தார். ஆனால் சத்ரியன் படத்தின் காப்பி தான் தெறி, அபூர்வ சகோதர்கள் படத்தின் காப்பி தான் மெர்சல் என்ற விமர்சனம் எழுந்தது. பிகில் படத்தை பொறுத்த வரை அது பாலிவுட் படமான சக்தே இந்தியாவின் காப்பி என்று கூறப்பட்டது.  எனவே அட்லியின் அனைத்து படங்களுமே ஏதேனும் ஒரு படத்தின் காப்பி தான் என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

எனினும் அட்லி அடுத்து யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் அட்லிக்கு பாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு அட்லி சொன்ன கதை பிடித்து போகவே ஷாருக்கான் உடனே ஓ.கே சொல்லிவிட்டார். அட்லி - ஷாருக்கான் கூட்டணியில் ஜவான் என்ற படம் உருவாகி வருகிறது.

அனிருத்துக்கு காசு மட்டும் அல்ல... 3 புது காரை நிறுத்தி ஆசை பட்டதை தேர்வு செய்ய சொன்ன கலாநிதி! வைரல் வீடியோ

இப்படத்தில் நயன் தாரா, ஹீரோயினாக நடிக்கிறார். வில்லன் கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர். ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வரும் 7-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான பதான் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ஜவான் படத்திற்காக அவரின் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். மறுபுறம் தமிழில் ஹிட் கொடுத்த அட்லி, ஹிந்தியில் சாதிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஜவான் படம் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் ஷாருக்கான், நயன் தாரா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நடிகர் ஷாருக்கான், அவர் மகள் சுஹானா மற்றும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நேற்றிரவு திருப்பதிக்கு சென்ற அவர்கள் அங்கேயே தங்கி, இன்று காலை சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதிக்கு முதல் முறை சென்றுள்ள ஷாருக்கான் வேஷ்டி, சட்டை அணிந்து சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…