திரையுலகைப் பொறுத்தவரை தீயாய் பரவி வரும் கொரோனா வைரஸுக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட மிகவும் பிரபலமானவர்களின் குடும்பங்கள் கூடதப்பவில்லை. ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஆராத்யா என ஒட்டுமொத்த குடும்பத்தையும் தொற்று பாடாய் படுத்திவிட்டது. ஆக்‌ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா, விஷால் மற்றும் அவரது தந்தை என கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

 

இதையும் படிங்க: பிரம்மாண்ட பட இயக்குநருக்கு எளிமையாக நடந்த திருமணம்... அழகிய ஜோடியின் அசத்தல் புகைப்படங்கள் உள்ளே...!

அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்தவர் இயக்குநர் ராஜமௌலி, தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதை அவரே டுவிட்டரில் தெரிவித்தார். அந்த பதிவில்,  எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் லேசான காய்ச்சல் இருந்தது. எனவே கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. எனவே மருத்துவர்களின் அறிவுரைப்படி எங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம். எங்கள் யாருக்குமே கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் முன்னெச்சரிக்கையாகவும், மருத்துவர்கள் காட்டிய வழிமுறைகளையும் பின்பற்றிவருகிறோம் என்று தெரிவித்திருந்தார். 

பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த பிரம்மாண்ட மற்றும் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு ஏற்பட்ட நிலை ரசிகர்களையும், திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் நுவ்வு நேனு, சித்திரம், நிஜம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் தேஜாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: சுஷாந்த் தற்கொலை வழக்கு... கைதாகிறாரா காதலி ரியா சக்ரபர்த்தி?... அதிரடி திருப்பம்...!

வெப் சீரிஸ் ஷூட்டிங்கிறாக மும்பை சென்று வந்த தேஜாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து சோதனை மேற்கொண்ட அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மருத்துவரின் அறிவுரையின் படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருகும் தொற்றும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேஜா விரைவில் குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.