தமிழகத்தில் ஓபனிங் கிங்: மீண்டும் ஒருமுறை நிரூபித்த அஜித் குமார்!
துணிவு படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தமிழகத்தில் ஓபனிங் கிங் என்று அஜித் தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. அதிகப்படியான திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. வங்கி கொள்ளையை மையப்படுத்திய இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த ஒரு படமாக இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நம்பர் 1 அஜித் தான் என்றும், ஓபனிங் கிங் அஜித் தன்னை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியுள்ளார் என்று சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆனால், உண்மையில், துணிவு படத்தை விட தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான வாரிசு படம் 26.5 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 17 கோடி வரையில் வசூல் குவித்த வாரிசு, கர்நாடகாவில் ரூ.5 கோடியும், கேரளாவில் ரூ.3.5 கோடியும், மற்ற பிரதேசங்களில் ஒட்டுமொத்தமாக ரூ.1 கோடி வரையிலும் வசூல் குவித்து ஒட்டுமொத்தமாக ரூ.26 கோடி வரையில் வாரிசு படம் வசூல் அள்ளியுள்ளது என்று தொழில்துறை தரவு கண்காணிப்பாளர் சைனிக் தகவல் தெரிவித்திருக்கிறார். முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய வாரிசு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
வம்சி இயக்கிய இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீமன், சரத்குமார், ஸ்ரீகாந்த், பிரபு, ஷாம், குஷ்பு, எஸ் ஜே சூர்யா, யோகி பாபு, விடிவி கணேஷ், கணேஷ் வெங்கட்ராமன், சுமன், சதீஷ், நந்தினி ராய் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். நேற்று முதல் நாள் முதல் ஷோ பார்த்த தமன் ரசிகர்களின் ஆரவாரத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இவ்வளவு ஏன், விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் என்று முதல் நாள் முதல் ஷோ பார்த்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் வாரிசு படத்தை விட துணிவு படம் குறைவாகவே வசூல் குவித்துள்ளது. அஜித் குமாரின் துணிவு படம் ஒட்டுமொத்தமாக ரூ.26 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று சைனிக் சுட்டிக் காட்டியுள்ளார்.
சுருள் முடி! திறந்த ஜாக்கெட்டுடன் ‘கவர்ச்சி’ போட்டோவை ரிலீஸ் செய்த நடிகை நம்ரதா மல்லா!