திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை சொன்னீங்க.. அப்படியானால் எல்லாமே செட்டிங்கா முதல்வரே? மநீம
வரும் 13, 14, 15 மற்றும் 16 ம் தேதிகளில் விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு படங்களை அதிகாலை 4 மற்றும் 5 மணிக்கு சிறப்புக் காட்சிகளாக வெளியிட தமிழக அரசு தடை விதித்திருந்தது. மேலும், திரையரங்கு நுழைவு வாயில்களில் உயரமான பேனர், கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டது.
நடிகர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தான் ரசிகர்கள் நலனில் அக்கறை இல்லை என்றால் மக்கள் நலன் மீது அரசுக்கும் அக்கறை கிடையாதா..? என பொன்னுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் 13, 14, 15 மற்றும் 16 ம் தேதிகளில் விஜய்யின் வாரிசு அஜித்தின் துணிவு படங்களை அதிகாலை 4 மற்றும் 5 மணிக்கு சிறப்புக் காட்சிகளாக வெளியிட தமிழக அரசு தடை விதித்திருந்தது. மேலும், திரையரங்கு நுழைவு வாயில்களில் உயரமான பேனர், கட்அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், திரைப்பட விநியோகஸ்தர்கள் அரசிடம் வைத்த கோரிக்கையை ஏற்று சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- ரஜினி, அஜித் கூட நெருங்க முடியாது? சம்பள விஷயத்தில் பாலிவுட் நடிகர்களை மிஞ்சிய விஜய்! மிரளும் தயாரிப்பாளர்கள்!
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நேற்று முன்தினம் (10.01.2023) #Varisu #Thunivu திரைப்படங்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என செய்தி வெளியிட்டு விட்டு, திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று இன்று அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அப்படியானால் எல்லாமே செட்டிங்கா முதல்வரே..?
திரையரங்கு வளாகங்களில் போட்டி போட்டுக் கொண்டு பேனர்கள் கிழிப்பு, இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே அடிதடி, கலாட்டா, முதல் நாள், முதல் காட்சி என்கிற பெயரில் நடைபெற்ற கொண்டாட்ட கூத்துகளில் ரசிகர் அகால மரணம் இதற்கெல்லாம் அரசும், காவல்துறையும் என்ன பதில் சொல்லப் போகிறது.?
இதையும் படிங்க;- ஷாக்கிங் நியூஸ்.. திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் உயிரிழப்பு - துணிவு பட கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம்..!
நடிகர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தான் ரசிகர்கள் நலனில் அக்கறை இல்லை என்றால் மக்கள் நலன் மீது அரசுக்கும் அக்கறை கிடையாதா..? எல்லாமே பணம்.! பணம்..!! பணம்...!!! மட்டும் தானா..? என காட்டமாக பதிவிட்டுள்ளார்.