ரஜினி, அஜித் கூட நெருங்க முடியாது? சம்பள விஷயத்தில் பாலிவுட் நடிகர்களை மிஞ்சிய விஜய்! மிரளும் தயாரிப்பாளர்கள்!
தளபதி விஜய் 'வாரிசு' படத்திற்காக, இதுவரை தென்னிந்திய திரையுலகில் யாரும் வாங்காத அளவிற்க்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
விஜய் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று வெளியான தளபதியின் 'வாரிசு' திரைப்படம். விஜய்யின் 66 ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படத்தை, தெலுங்கு திரையுலக முன்னணி இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். அதே போல் டோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு , தன்னுடைய வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
Vijay
இந்த படம் குறித்த தகவல் வெளியானதில் இருந்தே... படம் குறித்து வெளியான ஒவ்வொரு அப்டேட் தகவல்களையும் கொண்டாடி வந்த ரசிகர்கள், இந்த பொங்கலை... தளபதி பொங்கலாக திரையரங்குகளை தரமாக வரவேற்புடன் கொண்டாடி வருகிறார்கள். தொடர்ந்து மாஸ் படங்களில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வந்த விஜய், இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர்... ஆக்ஷன் மட்டும் இன்றி குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஸ்டைலிஷ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் வாரிசு படத்தில் நடிப்பதற்காக விஜய் வாங்கியுள்ள சம்பளம் தான் மிகப்பெரிய அளவில் பெரும் பொருளாக மாறியுள்ளது. பாலிவுட் நடிகர்களையே மிஞ்சும் விதத்தில்... இப்படத்திற்காக சுமார் 150 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம் விஜய். இந்த அளவிற்கு பெரிய தொகையை, கோலிவுட் திரையுலகில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் போன்ற நடிகர்கள் கூட வாங்கியது இல்லை என்பது தான் ஆச்சர்யம்.\
ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய சம்பளத்தை மற்றும் தாறுமாறாக விஜய் ஏற்றி கொண்டே செல்வதற்கும் கோலிவுட் திரையுலகை சேர்ந்த சில தயாரிப்பாளர்கள் தங்களின் எதிர்ப்புகளை நேரடியாக வெளிக்காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. தாண்டிய அடுத்த படத்திற்கும் இதை மிஞ்சும் விதத்தில் சம்பளம் கேட்பாரா? என்பதை நினைத்தே இவரை வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள் மிரளுவதாக கூறப்படுகிறது.