ஏ.ஆர்.முருகதாஸ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான "தர்பார்" திரைப்படம், முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாலும், லைகாவின் பிரம்மாண்ட தயாரிப்பு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் ஆகியன "தர்பார்" படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை ராக்கெட் அளவிற்கு ஏற்றிவிட்டது. 

இதையும் படிங்க: "பிகில்" படத்தின் நியூ ரெக்கார்டு பிரேக்கிங்... அர்ச்சனா கல்பாத்தி போட்ட ட்வீட்டால் குஷியான தளபதி ஃபேன்ஸ்...!

உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான ''தர்பார்'', எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. முதல் நான்கு நாட்களில் 150 கோடி வசூல் செய்ததாக ட்வீட்டு போட்டு கெத்து காட்டிய லைகா நிறுவனம், அதற்கடுத்தடுத்த நாட்களில் பேச்சு மூச்சே இல்லை. அப்பவே லைட்டா டவுட் ஆன ரஜினி ரசிகர்கள் "தர்பார்" வசூல் விபரம் கேட்டு லைகாவை நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். 

இதனிடையே, ரூ.65 கோடி வரை வாங்கிய "தர்பார்" திரைப்படம் பிளாப் ஆகிவிட்டதாகவும், இழப்பீட்டு தொகை வழங்க கோரியும் நேற்று 9 மாவட்ட விநியோகஸ்தர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் அவர்களை சந்திக்காத ரஜினி, இன்று போய் நாளை வா என திருப்பி அனுப்பிவிட்டார். இதனால் 'தர்பார்' படம் செம்ம பிளாப், லைகாவிற்கு பெருத்த அடி என்று சோசியல் மீடியாவில் சுற்றி வந்த தகவல்கள் உண்மையாகிவிட்டது. 

இதையும் படிங்க: "தர்பார்" அட்ட பிளாப்... நஷ்ட ஈடுகேட்டு... ரஜினி வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்கள்...!

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான பணிகளில் கூலாக இறங்கிவிட்டார். டோலிவுட்டின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனை வைத்து அடுத்த படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம். இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக நிலையில், "தர்பார்" படத்தில் பலத்த நஷ்டமடைந்த பிறகும் ஏ.ஆர்.முருகதாஸை வைத்து மீண்டும் களம் இறங்கும் லைகாவின் துணிச்சல் சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.